Published:Updated:

`மாட்டிறைச்சி உண்பது எங்கள் உரிமை!’ - 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் பதிவுக்கு பழங்குடியின பேராசிரியர் கைது

2017-ல் மாட்டிறைச்சி தடை குறித்து ஃபேஸ்புக் பதிவு எழுதிய பேராசிரியர் ஜீத்ராய் மீது, இப்போது எப்.ஐ.ஆர் பதிந்திருக்கிறது ஜார்க்கண்ட் காவல்துறை.

`மாட்டிறைச்சி உண்பது எங்கள் உரிமை!’ - 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் பதிவுக்கு பழங்குடியின பேராசிரியர் கைது

``மாட்டிறைச்சி உண்பது எங்கள் ஜனநாயக, கலாசார உரிமை. மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று எங்களின் மீது இந்து சாத்திரங்களைத் திணிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை” - என ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஜார்க்கண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியரும், செயற்பாட்டாளருமான ஜீத்ராய் ஹன்ஸ்டா மீது எப்.ஐ.ஆர் பதிந்திருக்கிறது காவல்துறை. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி ஜார்க்கண்ட் உறுப்பினர்கள் 2017 -ல் அளித்த புகாரை மறுபடி தோண்டியெடுத்து இப்போது வழக்கு பதிந்திருக்கிறது ஜார்க்கண்ட் காவல்துறை. மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் இரு சமூகத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவு 153(A), 295A, 505ன் கீழ், பேராசிரியர் ஜீத்ராய் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டிருப்பதாக Huffpost Indiaக்கு தெரிவித்திருக்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத ஜீத்ராயின் வழக்கறிஞர்.

ஜார்க்கண்ட் பழங்குடியினருக்காக இயங்கும், மஜி பர்கன மஹால் இயக்கம் பேராசிரியர் ஜீத்ராய் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அவர் பணிபுரிந்த கொல்ஹான் பல்கலைக்கழகத்துக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. 

Vikatan