Published:Updated:

`மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!'- பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

`மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!'- பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு
`மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!'- பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

த்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகா குருவும், `பதஞ்சலி’ நிறுவனத் தலைவருமான பாபா ராம்தேவ் நேற்று கலந்து கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இந்திய மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ``இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள் தொகையை 150 கோடியைத் தாண்டிச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அதிக மக்கள் தொகையைச் சமாளிக்க இந்தியா இன்னும் தயாராகவில்லை. இந்திய அரசாங்கம் மூன்றாவது மற்றும் அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு தேர்தலில் போட்டியிட, வாக்களிக்க அனுமதியை வழங்கக் கூடாது அதேபோல் அரசு அளிக்கும் எந்தச் சலுகையும் கிடைக்காத வகையில் சிறப்புச் சட்டம் கொண்டு வருவதுதான் இந்திய மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழி” எனப் பேசினார் பாபா ராம்தேவ்.

`மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!'- பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

இந்தப் பேச்சுக்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும் AIMIM கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, ``இது போல அரசியலமைப்புக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் பாபா ராம்தேவ்வின் அவசியமில்லாத பேச்சுகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?

`மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!'- பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

அவர் வயிறு மற்றும் கால்களை மடக்கியும் வித்தை காட்டுகிறார் என்பதற்காக மூன்றாவதாகப் பிறந்த நரேந்திர மோடி தன்னுடைய வாக்குரிமையை இழக்க வேண்டுமா?“ என ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். பாபா ராம்தேவ் ஏற்கெனவே கடந்த ஆண்டு தான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பிரதமராக முடியும் என அவர் கோவாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.