Published:Updated:

``எதுவா இருந்தாலும் திருமாவளவன்கிட்ட பேசிக்கிறேன்... வேற என்ன?!” காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இந்துக் கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவனுக்கும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் முற்றுகிறது.

``எதுவா இருந்தாலும் திருமாவளவன்கிட்ட பேசிக்கிறேன்... வேற என்ன?!” காயத்ரி ரகுராம்

இந்துக் கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவனுக்கும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் முற்றுகிறது.

Published:Updated:
காயத்ரி ரகுராம்

புதுச்சேரியில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி மாநாட்டில், அயோத்தியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ``பாபர் மசூதி இருந்த இடத்துக்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்துக் கோயில், மசூதி, தேவாலயம் என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அதன் கட்டமைப்பை வைத்து அறியலாம். கூம்பாக கட்டியிருந்தால் மசூதி, உயரமாக கட்டியிருந்தால் தேவாலயம், நிறைய அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்” எனப் பேசியுள்ளார். திருமாவின் பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரமிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்து சமூகத்தினரிடம் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக வருத்தம் தெரிவித்த திருமாவளவன், ``பி.ஜே.பி-யின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பி.ஜே.பி-க்கு எதிராக நிறுத்தாமல், இந்துக்களுக்கு எதிரானவனாக நிறுத்த முயல்கின்றனர். நான் கூறிய கருத்தில் உள்நோக்கமில்லை. ஆனால், உண்மை உண்டு என்பதை என் நண்பர்கள் அறிவர். இதற்காக நான் வருந்துகிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து நடிகையும், பி.ஜே.பி உறுப்பினருமான காயத்ரி ரகுராமிடம் இருந்து சூடான ட்வீட் வந்தது. `திருமாவளவனை பார்த்த இடத்தில் அடியுங்கள்' எனவும், இந்துக்கள் அவருக்கு மடிசார் புடவை அனுப்பி வைக்கும்படியும் காயத்ரி ரகுராம் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. `திருமாவளவனை அடியுங்கள்’ எனத் தான் பதிவிட்ட ட்விட்டை டெலிட் செய்த காய்த்ரி ரகுராம், தனக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தொடர் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தார்.

காயத்ரி ரகுராமின் ட்வீட்
காயத்ரி ரகுராமின் ட்வீட்

நவ.27-ம் தேதி காலை 10 மணிக்கு, தான் மெரினா கடற்கரைக்கு வருவதாகவும், முடிந்தால் திருமாவளவன் தன்னை நேருக்கு நேர் அங்கு சந்திக்கலாம் எனவும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பொங்க, நேற்று காலை சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு வி.சி.க-வினர் போராட்டம் நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் பகலவன், ``கோயிலுக்குச் செல்பவர்கள் குழந்தைகள், வீட்டு இளம் பெண்களிடம் அங்குள்ள சிற்பங்களைக் காட்டி, அதன் அழகை எடுத்துச்சொல்ல முடியுமா. பாலுணர்வு சம்பந்தப்பட்ட சிற்பங்கள்தான் கோயில்களில் பிரதானமாக உள்ளன. இதை எப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் வெளிப்படையாக குழந்தைகளிடம் சொல்வார்கள். இக்கருத்ததைத் தான் திருமாவளவனும் கூறினார்.

இவர்கள் இந்துக் கடவுள்கள் பற்றியும், கோயில்கள் பற்றியும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுச் செல்வார்கள், நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா?
காய்த்ரி ரகுராம்
பகலவன்
பகலவன்

இதற்காக, நடிகை காயத்ரி ரகுராம் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நிர்வாணமான ஒரு சிலையை தனது தெருவிலோ, வீட்டு வாசலிலோ காயத்ரி ரகுராமால் வைக்க முடியுமா, அவர் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா… திருமாவளவனுக்கு மடிசார் அனுப்ப வேண்டும் எனச் சாதிவெறியைத் தூண்டும் வகையில் காயத்ரி ரகுராம் பேசுவதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்துள்ளோம்.” என்றார்.

இதுகுறித்து விளக்கமறிய காயத்ரி ரகுராமிடம் பேசினோம். ``மீடியேட்டராக இருப்பவர்களின் விமர்சனத்துக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. இவர்கள் இந்துக் கடவுள்கள் பற்றியும், கோயில்கள் பற்றியும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுச் செல்வார்கள், நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா. திருமாவளவனை நேருக்கு நேராக சந்திக்கத் தயார். அங்கு பேசிக்கொள்கிறேன் அனைத்தையும். நான் சென்னை வந்ததும் இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசுகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

gayathiri raguram
gayathiri raguram

திருமாவளவனின் சர்ச்சையான பேச்சும், இதைத் தொடர்ந்து காயத்ரி ரகுராமின் கருத்துகளும் தமிழக அரசியலை தகிக்க வைத்துள்ளன.