Published:Updated:

போட்டோவுக்கு போஸ், போலீஸாரைக் கண்டதும் இந்து சேனா அமைப்பினர் ஓட்டம் - அக்பர் சாலை சர்ச்சை!

இந்து சேனா அமைப்பினர்: அக்பர் சாலை சர்ச்சை!

டெல்லியின் பிரசித்தி பெற்ற அக்பர் சாலையை இந்து அமைப்பினர சிலர், பெயர் மாற்றம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

போட்டோவுக்கு போஸ், போலீஸாரைக் கண்டதும் இந்து சேனா அமைப்பினர் ஓட்டம் - அக்பர் சாலை சர்ச்சை!

டெல்லியின் பிரசித்தி பெற்ற அக்பர் சாலையை இந்து அமைப்பினர சிலர், பெயர் மாற்றம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

Published:Updated:
இந்து சேனா அமைப்பினர்: அக்பர் சாலை சர்ச்சை!

டெல்லியின், லுட்யன்ஸ் நகரத்தில் அக்பர் சாலை அமைந்திருக்கிறது. இந்த சாலையின் பெயர்ப்பலகை மீது நேற்றைய தினம், நபர்கள் சிலர் விக்ரமாதித்யா என்ற மன்னரின் உருவப்படத்தை ஒட்டி மாலை அணிவித்தனர். மேலும், அந்த பெயர்ப்பலகையின் மீது, 'இனி மேல் இது அக்பர் சாலை அல்ல....`சாம்ராட் ஹேமு விக்ரமாதித்ய மார்க்' சாலை என்றே அழைக்கப்படும்!' என்ற வாசகம் அடங்கிய போஸ்ட்டர் ஒன்றினையும் ஒட்டி, சில நிமிடங்கள் கோஷமிட்டுவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனை அங்கிருந்தவர்கள் சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவ செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். டெல்லியின் பிரசித்தி பெற்ற அக்பர் சாலையை சிலர், பெயர் மாற்றம் செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. விவரமறிந்து உடனடியாக அக்பர் சாலைக்கு விரைந்த டெல்லி போலீஸார், பெயர்ப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் வாசகங்களைக் கிழித்தெறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

போஸ்ட்டர் ஒட்டி பெயர் மாற்றம் செய்ய முயன்ற இந்து சேனா அமைப்பினர்
போஸ்ட்டர் ஒட்டி பெயர் மாற்றம் செய்ய முயன்ற இந்து சேனா அமைப்பினர்

பொதுச் சொத்தை சட்ட விரோதமாகப் பெயர் மாற்றம் செய்ய முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்பர் சாலையில் போஸ்ட்டர் அடித்தது தாங்கள்தான் என்று இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்து சேனா பாரத மாதாவின் துணிச்சல் மிக்க மகன்களில் ஒருவரான, ராஜா ஹேம் சந்திர விக்ரமாதித்யா அவர்களை இந்த தினத்தில் நினைவு கூறுகிறது. அவர் சிறிது காலம் மட்டுமே டெல்லியை ஆட்சி செய்திருந்தாலும், அந்த காலம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் இந்து சேனா அமைப்பு, அக்பர் சாலையை 'சாம்ராட் ஹேமு விக்ரமாதித்ய மார்க் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று டெல்லி அரசை வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த அறிக்கையை தொடர்ந்து, டெல்லி போலீஸார் விஷ்ணு குப்தா, அவரின் அமைப்பினரையும் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்றிரவு போலீஸாரின் தேடுதல் வேட்டைக்கு மத்தியில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா தனது அமைப்பினருடன் அக்பர் சாலையின் பெயர்ப் பலகைக்கு முன்பாக நின்ற படி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளிக்க முயன்றார். அப்போது, அந்த இடத்திற்கு போலீஸார் திடீரென வந்ததும், விஸ்ணு குப்தா மற்றும் அமைப்பினர் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அக்பர் சாலையில் போஸ்ட்டர்கள் ஒட்டி விட்டு, வீரமாகக் கோஷமிட்ட இந்து சேனா அமைப்பினர், போலீஸாரை கண்டதும் அலறிக்கொண்டு ஓடிய வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அக்பர் சாலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் இது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, இந்து சேனா அமைப்பினர் டெல்லியிலுள்ள சீன தூதரகத்தின் பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்தி தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

பாபர் சாலையின் பெயர்ப் பலகையில் கருப்பு நிற சாயம் பூசும் இந்து சேனா அமைப்பினர்
பாபர் சாலையின் பெயர்ப் பலகையில் கருப்பு நிற சாயம் பூசும் இந்து சேனா அமைப்பினர்

அதே போல், 2019-ல் டெல்லி பாபர் சாலையில் உள்ள பெயர்ப் பலகையைக் கருப்பு நிற சாயம் கொண்டு பூசி, பாபர் சாலை என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015-ல், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அக்பர் மற்றும் ஃபெரோஸ் ஷா ஆகியோரின் பெயரிடப்பட்ட சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் அனைத்தையும் தேடித் தேடி இந்த அமைப்பினர் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்து சேனா அமைப்பினரின் இந்த செயல், டெல்லியில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.