Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை - ”வீடியோவை எடுத்த அன்றே வெளியிட்டிருக்கலாமே?” - அரசு வாதம்!

பள்ளி மாணவி தற்கொலை

அரியலூர் மாணவி மரண விவகாரத்தை அரசியலாக்கி தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார்கள் - தமிழக அரசு வாதம்!

அரியலூர் மாணவி தற்கொலை - ”வீடியோவை எடுத்த அன்றே வெளியிட்டிருக்கலாமே?” - அரசு வாதம்!

அரியலூர் மாணவி மரண விவகாரத்தை அரசியலாக்கி தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார்கள் - தமிழக அரசு வாதம்!

Published:Updated:
பள்ளி மாணவி தற்கொலை

அரியலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் அருகே மைகேல்பட்டியில் உள்ள தனியார்ப் பள்ளியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 19-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் பயின்ற கிறிஸ்தவ பள்ளியில் அவரை மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறிய இந்து அமைப்புகள் அதற்கு ஆதரமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில், அந்த மாணவி பேசும் இரண்டாவது வீடியோவும் வெளியானது. அதில் தன்னை மதம்மாற்றம் பற்றி அந்த மாணவி எதுவும் கூறவில்லை.

உயர் நீதிமன்ற மதுரைக் கிள
உயர் நீதிமன்ற மதுரைக் கிள
விகடன்

இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் மேற்கொண்ட விசாரணையில் " இந்தப் பள்ளிக்கூடத்தில் 16 முறை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், மதப் பிரசாரம் நடந்ததாக எந்தப் புகாரும் இல்லை" என தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தை அரசியலாக்கி தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார்கள். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை கெடுக்க முனைகிறார்கள். மேலும் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படும், மாணவியின் பெற்றோர், மற்றும் மாணவியின் விடீயோவை பதிவு செய்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முத்துவேல் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், 2 நாள்களுக்கு முன்பே எடுத்த வீடியோவை மாணவி இறந்த பின்பு பரப்பியதில் உள்நோக்கம் உள்ளதை அறிய முடிகிறது. நீதியை விரும்பினால், வீடியோ எடுத்த அன்றே வெளியிட்டிருக்கலாமே? ஆனாலும் 53 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே மேலும் விசாரணைக்கு ஒருவார காலம் அவகாசம் வேண்டும்." எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் " காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. எனவே மாணவி தற்கொலை விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். சிறுமிகள் தங்கும் விடுதியில் பூச்சி மருந்து எப்படி வந்தது? என்ற சந்தேகமும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளி
தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளி

பள்ளி தரப்பில் "160 ஆண்டுகளாகச் செயல்படும் கல்வி நிறுவனத்தில் பல மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர், ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். எனவே எங்கள் மீது அரசியல் காரணத்திற்காக அவதூறு பரப்பப்படுகிறது" என கூறப்பட்டது.
வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

இந்த நிலையில், மைகேல்பட்டி கிராம மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் " எல்லா மதத்தைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால் எங்களிடம் அந்த பள்ளியில் மதம் மாற்றக் கட்டாயப்படுத்தியதாகப் பேட்டியளிக்க வேண்டும் எனச் சிலர் தொந்தரவு செய்கிறார்கள். எனவே எங்களுக்கு அவர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்" என மனு அளித்துள்ளார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism