Published:Updated:

`குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்!'-டெல்லி விமான நிலையத்திலே தடுத்த நிறுத்தப்பட்ட பிரிட்டிஷ் எம்.பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரிட்டிஷ் எம்.பி டெபி ஆபிரகாம்ஸ்
பிரிட்டிஷ் எம்.பி டெபி ஆபிரகாம்ஸ் ( twitter )

இமிகிரேஷன் கவுண்டரில் பாஸ்போர்ட், இ-விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் நின்றுகொண்டிருந்தேன். எனது முறை வந்தபோது அதிகாரியிடம் எனது ஆவணங்களைக் காண்பித்தேன். அவர் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து தலையை அசைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரிட்டிஷ் எம்.பி-யான டெபி ஆபிரகாம்ஸ் இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி டெபி ஆபிரகாம்ஸ். இவர் பிரிட்டனில், காஷ்மீருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீருக்கான ஸ்பெஷல் அந்தஸ்தான ஆர்ட்டிக்கிள் 370-ஐ ரத்து செய்தபோது அதை எதிர்த்து கடுமையாகக் குரல் கொடுத்தார் டெபி. இது, இந்திய அரசாங்கத்தின் ``ஒருதலைப்பட்ச முடிவு". ஆர்ட்டிக்கிள் 370 ரத்து ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைக் கெடுப்பதாகும். அத்துடன் பிராந்தியத்தில் பதற்றங்களை மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் நடவடிக்கை ``சர்வதேச சட்டத்துக்கு முரணானது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார் டெபி.

டெபி ஆபிரகாம்ஸ்
டெபி ஆபிரகாம்ஸ்
twitter

இந்த நிலையில், நேற்று காலை டெபி குடும்பத்தினரையும் நண்பா்களையும் சந்திப்பதற்காக லண்டனிலிருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால், விமானத்தில் தரையிறங்கிய அவரை அதிகாரிகள் நாட்டுக்குள் நுழைய விடாமல் நாடு கடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த சங்கடங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ``காலை 8.50 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தேன். எல்லா பயணிகளைப்போல நானும் இமிகிரேஷன் கவுண்டரில் பாஸ்போர்ட், இ-விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் நின்றுகொண்டிருந்தேன். எனது முறை வந்தபோது அதிகாரியிடம் எனது ஆவணங்களைக் காண்பித்தேன். அவர் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து தலையை அசைத்தார்.

Vikatan

பின்னர் என் விசா நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கூறியவர் எங்கேயோ சென்றார். 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் திரும்பியவர் என்னிடம் கோபமாக கத்தி பேச ஆரம்பித்தார். முரட்டுத்தனமாக நடந்துகொண்டவர் என்னுடன் வாருங்கள் என்று கத்தினார். என்னிடம் அப்படிப் பேசாதீர்கள் என்று கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. என்னைப் பயணிகளை நாடு கடத்தும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே என்னை உட்காரும்படி கட்டளையிட்டார். ஆனால், நான் உட்காரவில்லை. அவர் என்னை நடத்தும்விதம் மற்றவர்களுக்குத் தெரியட்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்.

டெபி ஆபிரகாம்ஸ்
டெபி ஆபிரகாம்ஸ்
twitter

அதேநேரம் அவர்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய முயல எனது உறவினர்களை அழைத்தேன். அவர்கள் பிரிட்டன் வெளியுறவுத் துறையை தொடர்புகொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள்ளாக நான் துபாய்க்கு நாடு கடத்தப்பட்டேன். விமான நிலையத்தில் நான் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன். நிறைய இமிகிரேஷன் அதிகாரிகள் என்னை வந்து பார்த்தனர். அவர்களிடம் எனது விசா ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது தொடர்பாக பேச முயன்றேன். ஆனால், யாருக்கும் அதுதொடர்பாக தெரியவில்லை.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் அங்கு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்கூட, `விசா எதற்கு ரத்து செய்யப்பட்டது தெரியவில்லை என்று கூறி அங்கு நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டார். இந்திய அரசு தனது மனதை மாற்றிக்கொள்ளும் என நம்புகிறேன். அவர்கள் என் குடும்பத்தையும், நண்பர்களையும் சந்திக்க விடுவார்கள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமோ, ``ரத்து செய்யப்பட்டது குறித்து அவருக்கு முறையாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அவர் இந்தியா வந்ததால் திருப்பி அனுப்பப்பட்டார்" என்று கூறியுள்ளது. ஆனால், டெபியோ தனது விசா முறையான காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். டெபி எடுத்த இ-விசா கடந்த அக்டோபரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது 2020 அக்டோபர் வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்படுகிறது.

டெபி ஆபிரகாம்ஸ்
டெபி ஆபிரகாம்ஸ்
twitter

இ-விசா சுற்றுலாவின் வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்காக மட்டுமே... வணிக, அரசியல் அல்லது உத்தியோகபூர்வ போன்ற வேறு எந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் டெபி ``செல்லுபடியாகும் விசா” வைத்திருக்கவில்லை என்று இந்திய அரசுத் தரப்பில் சொல்லப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது. மேலும், பிரிட்டன் ஹை கமிஷன் இந்த விவகாரத்தில் தொடர்ந்து இந்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.

இதற்கிடையே, மீண்டும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெபி, ``நான் இந்தியாவில் உறவினர்களைக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அரசியலில் இறங்குவதற்கான காரணம் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். இந்த விவகாரங்களில் எனது சொந்த அரசாங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் நான் தொடர்ந்து சவால் விடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு