Published:Updated:

மதுரை: நீதிமன்ற பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் காவலர்கள்!

பின்வாசல் வழியே அழைத்துச் செல்லப்பட்ட போது.
பின்வாசல் வழியே அழைத்துச் செல்லப்பட்ட போது.

கைது செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாத்தான்குளம் போலீஸார், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நீதிமன்ற பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன், கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ, முதல்கட்டமாக ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகியோரை காவலில் எடுத்து மூன்று நாள்கள் விசாரித்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து, இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

முன்வாசலில் செல்லும் சி.பி.ஐ அதிகாரிகள்
முன்வாசலில் செல்லும் சி.பி.ஐ அதிகாரிகள்

அதன் அடிப்படையில், ஐவரும் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்லப்படாமல், யாருக்கும் தெரியாமல், நீதிமன்றத்தின் பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் முதல் ஸ்வப்னா வரை... விசாரணையில் புது திருப்பம்! | The Imperfect Show 13/7/2020

மேலும், நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல, சாத்தான்குளம் போலீஸார், தூத்துக்குடி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்துவரும்போது, சிறையின் பிரதான நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்லாமல், சிறைச்சாலையின் பின்பக்க வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

நீதிமன்ற வாசலில் காத்திருக்கும் பத்திரிகையாளர்கள்.
நீதிமன்ற வாசலில் காத்திருக்கும் பத்திரிகையாளர்கள்.

சாத்தான்குளம் போலீஸாரை அழைத்து வருவதை செய்தியாகப் பதிவு செய்ய பத்திரிகையாளர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்திருந்தனர். இப்படி, ஆரம்பத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் கண்களில் இருந்து, சாத்தான்குளம் காவலர்களை மறைத்த தமிழக போலீஸாரின் பாணியை, தற்போது சி.பி.ஐ அதிகாரிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

``மதுரை நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை விசாரித்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் கூட நுழைய விடாமல், வாசலில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சாலையில் நிற்க வைப்பது இதுவே முதல் முறை. காவலர்கள் வழக்கு என்பதால், அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது காவல்துறை. இப்போது சி.பி.ஐ அதிகாரிகளும் அதே முறையை பின்பற்றுகின்றனர்.

சாத்தான்குளம்: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முன்பு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனை ஏன்?

இது வெளிப்படைத்தன்மைக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம். தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கின் குற்றவாளிகளை பின் வாசல் வழியாக கூட்டிச் செல்வது எந்தவிதத்திலும் சரியானது இல்லை” என்று கொதிக்கின்றனர் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு