Published:Updated:

``வெங்காயம், தக்காளி விலையைக் குறைக்க மோடி பிரதமராகவில்லை!" - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மத்திய அமைச்சர் கபில் பாட்டில் ( ட்விட்டர் )

`ஆட்டு இறைச்சியை ரூ.700-க்கும், பீட்சாவை ரூ.500 முதல் ரூ.600-க்கும் வாங்க முடியும். அதேநேரத்தில் வெங்காயம் 10 ரூபாய்க்கும், தக்காளியை ரூ.40-க்கும் வாங்குவது கடினமாக உள்ளதா?' - கபில் பாட்டில்.

``வெங்காயம், தக்காளி விலையைக் குறைக்க மோடி பிரதமராகவில்லை!" - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

`ஆட்டு இறைச்சியை ரூ.700-க்கும், பீட்சாவை ரூ.500 முதல் ரூ.600-க்கும் வாங்க முடியும். அதேநேரத்தில் வெங்காயம் 10 ரூபாய்க்கும், தக்காளியை ரூ.40-க்கும் வாங்குவது கடினமாக உள்ளதா?' - கபில் பாட்டில்.

Published:Updated:
மத்திய அமைச்சர் கபில் பாட்டில் ( ட்விட்டர் )

2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மின்னணு முறையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் சாமான்ய மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். இந்த பட்ஜெட் தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்" என விமர்சித்திருந்தார்.

அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``சாமான்யர்களுக்கென ஒன்றுமில்லாத பட்ஜெட்" என கருத்து தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இது ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்த  நிதி அமைச்சர்...
பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்...

இப்படிப் பலதரபட்ட விமர்சனங்களைச் சந்தித்துவரும் இந்த பட்ஜெட் அறிவிப்போடு, நேற்று முன்தினம் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை அமைச்சர் கபில் பாட்டில் பேசியதும் தற்போது வைரலாகி விவாதப் பொருளாகியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் கபில் பாட்டில், ``வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையைக் குறைக்க மோடி பிரதமராக வரவில்லை. விலையேற்றதுக்கான காரணம் புரிந்துகொண்டால் பிரதமரை குறைசொல்ல மாட்டீர்கள்.

ஆட்டு இறைச்சியை ரூ.700-க்கும், பீட்சாவை ரூ.500 முதல் ரூ.600-க்கும் வாங்க முடியும். அதேநேரத்தில் வெங்காயம் 10 ரூபாய்க்கும், தக்காளியை ரூ.40-க்கும் வாங்குவது கடினமாக உள்ளதா? வெங்காயம், உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு, இவற்றிலிருந்து முதலில் வெளியே வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் கபில் பாட்டில்
மத்திய அமைச்சர் கபில் பாட்டில்
ட்விட்டர்

சில துணிச்சலான முடிவுகளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால்தான் எடுக்க முடியும். எனவே, நாடு இல்லையென்றால் வெங்காயம், உருளைக்கிழங்கு எங்கிருந்து வாங்குவது? முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இவர்கள் நாட்டைக் காப்பாற்றும் பணியை முன்னெடுத்துள்ளனர்" எனக் கூறினார்.

மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism