Published:Updated:

அச்சுறுத்தும் கொரோனா.. பொதுநிகழ்ச்சியில் குத்தாட்டம்! - சர்ச்சையில் சிக்கிய கோவை அதிகாரி

அதிகாரி குத்தாட்டம்
அதிகாரி குத்தாட்டம்

கொரோனா வைரஸ் மக்களிடையே பீதியைக் கிளப்பி வரும் நிலையில், கோவையில் ஓர் அதிகாரி பொது இடத்தில் குத்தாட்டம் போட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தப்பிக்க தமிழக அரசுத் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக, கோவை கேரள எல்லை அருகே இருப்பதால் கடந்த சில நாள்களாகவே இங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை
கோவை

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ``கேரளாவிலிருந்து கோவை வந்து படிக்கும் மாணவர்கள், தங்களது ஊர்களுக்குச் செல்ல வேண்டாம். அதேபோல, கோவை வாசிகளும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்போம். அதேபோல, போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் மத நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் பேசி முடித்த பிறகு, உதவி திட்ட அலுவலர் மதி, ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் `மரணம் மாஸ் மரணம்' பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.

மகளிர் தினவிழா
மகளிர் தினவிழா

கொரோனா பீதியால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நேரத்தில், மதியின் இந்த குத்தாட்டம் பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துக்குமாரசாமி, ``கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முடிந்த அளவுக்கு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, 8-ம் தேதி நடக்க வேண்டிய மகளிர் தினத்துக்கு, 15-ம் தேதி எதற்காக நிகழ்ச்சி வைக்க வேண்டும்?

மதி
மதி

அப்படியே வைத்தாலும், நிலைமையைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கொண்டாட்டங்களைத் தவிர்த்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் இது ஓர் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கேட்டதற்கு, ``ஓர் அதிகாரி பொது இடத்தில் இப்படி நடந்துகொள்வது சரியில்லை. பொது இடத்தில் அதிகாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

ஆட்சியர் ராசாமணி
ஆட்சியர் ராசாமணி

அதுவும், இதுபோன்ற ஓர் சூழலில் அதிகாரிகள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு