Published:Updated:

வழிப்பறி வழக்கில் கைதான இளைஞருக்கு போலீஸார் கஸ்டடி டார்ச்சர்? - தேனி சர்ச்சை!

தேனி தேவதானப்பட்டி காவல்நிலையம்

`சாத்தான்குளம் சம்பவம் பாணியில் தேனியில் ஒரு சம்பவம்... ஸ்டேஷனில் இளைஞரை சித்ரவதை செய்யும் ஜெயமங்கலம் போலீஸார்' என்ற தகவல் மாவட்டத்தில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வழிப்பறி வழக்கில் கைதான இளைஞருக்கு போலீஸார் கஸ்டடி டார்ச்சர்? - தேனி சர்ச்சை!

`சாத்தான்குளம் சம்பவம் பாணியில் தேனியில் ஒரு சம்பவம்... ஸ்டேஷனில் இளைஞரை சித்ரவதை செய்யும் ஜெயமங்கலம் போலீஸார்' என்ற தகவல் மாவட்டத்தில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Published:Updated:
தேனி தேவதானப்பட்டி காவல்நிலையம்

தேனி மாவட்டம் தேவதானபட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி சூசையப்பர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷாத் ராஜ். கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வழக்கறிஞருடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அப்போது தேவதானப்பட்டியில் எஸ்.ஐ-யாக இருந்த வெங்கடேஷ் பிரபு, ரிஷாத் ராஜின் தந்தை செல்வத்தை தாக்கியதாக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 2021-ல் கெங்குவார்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரிஷாத் ராஜ் தகராறு செய்ததைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். இதையடுத்து பிப்ரவரியில் வெளியே வந்த அவர் பொம்மிநாயக்கன்பட்டி அருகே செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் இந்த வழக்கில் ரிஷாத்ராஜை ஜெயமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக, `சாத்தான்குளம் சம்பவம் பாணியில் தேனியில் ஒரு சம்பவம்... ஸ்டேஷனில் இளைஞரை சித்ரவதை செய்யும் ஜெயமங்கலம் போலீஸார்' என்ற தகவல் மாவட்டத்தில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வழக்கறிஞர் பாண்டியராஜன்
வழக்கறிஞர் பாண்டியராஜன்

இதுகுறித்து ரிஷாத் ராஜ் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜனிடம் பேசினோம். ``ஏப்ரல் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ரிஷாத் ராஜை தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், காவலர்கள் சுப்பிரமணி, அமர்நாத் உள்ளிட்டோர் அழைத்துச்சென்றுள்ளனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் குறித்து 2 நாள்கள் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பெரியகுளம் நீதித்துறை நடுவரிடம் முறையிட்டோம். அப்போது ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஸனில் ரிஷாத் ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரிமாண்டுக்கு அழைத்துவர உள்ளனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்றிரவு 8 மணிக்கு மேல் ரிஷாத் ராஜை ரிமாண்ட் செய்வதற்காக லட்சுமிபுரம் கோர்டுக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்ற விசாரணையின்போது ரிஷாத் ராஜூக்கு உடலில் காயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உடல்தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலில் வெளிக்காயம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்ததை அடுத்து, அவர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்டவிரோத காவல்
சட்டவிரோத காவல்

சாத்தான்குளம் வழக்கில் எவ்வாறு பொய்யான சான்றிதழ் அளிக்கப்பட்டதோ அதேபோல இந்த வழக்கிலும் பொய் சான்று அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் தரப்பில் ரிஷாத் ராஜுக்கு தீக்காயம் இருப்பதாகக் கூறுகின்றனர். அதைக் கூட இல்லையென மருத்துவச் சான்று கூறுகிறது. இரும்பு கம்பியால் அடித்ததால் ரிஷாத் ராஜின் தொடை, பின்பகுதி, விரல்கள் கருப்பாக கன்னியுள்ளது. தலைகீழாக கட்டி அடித்ததால் தலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. வலது கெண்டைக்காலில் தீக்காயம் உள்ளது. பாதங்களில் அடித்துள்ளதால் நடக்கவே முடியாமல் சிரமப்படுகிறார். மனைவி, 8 மாத குழந்தையைக் கொண்ட தேங்காய் வெட்டும் தொழிலாளியை இவ்வாறு சட்டவிரோதக் காவலில் வைத்து தாக்கியது மனித உரிமை மீறல் என்பதால் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

ரிஷாத் ராஜ்
ரிஷாத் ராஜ்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தேவதானபட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் விசாரித்தோம். ``ரிஷாத் ராஜ் மீது 12 வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்தார். வந்தவுடன் அரசு பஸ் கண்டக்டர் மண்டையை உடைத்தது, அவரது வீட்டின் அருகே உள்ள பெரியவரை அடித்து மண்டையை உடைத்தது என மீண்டும் சேட்டையைத் தொடங்கிவிட்டார். செல்போன் வழிப்பறி வழக்கில் ஏப்ரல் 5-ம் தேதிதான் அவரைக் கைது செய்தோம். முறையாக ரிமாண்ட் செய்துள்ளோம். அவர் தந்தை செல்வம் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரும் 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்தான். நவீன யுகத்தில் எதையும் மறைக்க முடியாது, நாங்கள் கஸ்டடி டார்ச்சர் செய்ததாகக் கூறுவதில் எந்த வித உண்மையும் இல்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism