Published:Updated:

`ஆரியர்கள் படையெடுப்பு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை..!' - சர்ச்சையைக் கிளப்பிய ஐஐடி காலண்டர்

சர்ச்சையைக் கிளப்பிய ஐஐடி காலண்டர்
News
சர்ச்சையைக் கிளப்பிய ஐஐடி காலண்டர் ( IIT KARAGPUR )

`ஆரிய படையெடுப்பு கட்டுக்கதைக்கு மறுப்பு' என்ற தலைப்பில் சில சான்றுகள் முன்வைக்கப்பட்டு, ஆரிய படையெடுப்பு திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) வெளியிட்டிருக்கும் 2022-ம் ஆண்டுக்கான காலண்டர், சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

`இந்திய அறிவு அமைப்பின் அடித்தளத்தை மீட்டெடுப்பது என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காலண்டரில் ஆரியர்களின் படையெடுப்பைக் கற்பனை என்றும், இந்துக்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே ஆரியர்கள் தங்களைத் தாக்கினார்கள் என்றும் திராவிடர்கள் பொய்யான கோட்பாட்டை உருவாக்கிவைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐஐடி நிர்வாகத்தின் இந்த காலண்டர் விவகாரம் பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தச் சர்ச்சைக்குரிய காலண்டர், ஐஐடி கரக்பூரில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

ஐஐடி காலண்டர்
ஐஐடி காலண்டர்
IIT KARAGPUR

இந்த காலண்டர் வேத கலாசாரத்தின் பூர்வீக இயல்புக்காக வாதிடுகிறது. மேலும், `சிந்து சமவெளி நாகரிகத்தின் மறுவிளக்கம்' என்ற பெயரில் ஆரியர்கள் படையெடுப்பு என்ற ஒன்று நடக்கவேயில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'இந்திய அறிவு அமைப்பின் அடித்தளத்தை மீட்டெடுப்பது' என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காலண்டரில் 12 மாதங்களுக்கான, 12 பக்கங்களில் உலகப் புகழ்பெற்ற நபர்கள் சிலரின் படங்களும், அவர்களின் பாடங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. விவேகானந்தர், சப்த ரிஷி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோரின் பெயர்களும், அவர்களின் பாடங்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக காலண்டரின் முதல் பக்கத்தில், `ஆரிய படையெடுப்பு கட்டுக்கதைக்கு மறுப்பு' என்ற தலைப்பில் சில சான்றுகள் முன்வைக்கப்பட்டு, ஆரிய படையெடுப்பு திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ஆரிய படையெடுப்பு’ என்ற தலைப்பை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காலண்டருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். ``ஐஐடி-யின் இந்த காலண்டர், வரலாற்று உண்மைகளைத் திரித்து முன்வைக்கப்பட்டிருக்கும் பொய் வாதம். ஆரியர்களின் தாக்குதலைக் கட்டுக்கதை என்று கூறி, வரலாற்றைப் பொய்யாக்கும் முயற்சி. பா.ஜ.க உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளும், இயக்கங்களும் ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மூலம், அறிவியலுக்குப் புறம்பான ஆதாரபூர்வமற்ற கருத்துகளை வைத்திருக்கின்றன" என்று வரலாற்று ஆய்வாளர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

சர்ச்சையைக் கிளப்பிய ஐஐடி காலண்டர்
சர்ச்சையைக் கிளப்பிய ஐஐடி காலண்டர்
IIT KARAGPUR

இது குறித்து `தி இந்து' செய்தி நிறுவனத்திடம் பேசிய கரக்பூர் ஐஐடி கட்டடக்கலை பேராசிரியர் சென், ``72 மணி நேரத்துக்குள், அந்த காலண்டரைப் பற்றி 1,000 மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்தன. அவற்றில் 800 மின்னஞ்சல் நேர்மறையானவை. 100 நேர்மறை மற்றும் எதிர்மறையானவை. 60 - 70 மின்னஞ்சல்கள் காலண்டரில் மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தின. இந்த மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட தங்களின் மனநிலையை வெளிக்காட்டுகின்றனர்" என்று குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

ஐஐடி-யின் இந்தச் சர்ச்சைக்குரிய காலண்டர், இந்துத்துவா கொள்கையைத் திணித்து, வரலாற்றைத் திரித்து எழுதும் வலதுசாரிகளின் முன்னெடுப்பு எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.