Published:Updated:

கோட்சே தொடர்பாக வாக்குவாதம்... வலுக்கும் எதிர்ப்பு! - கோவையில் நடந்தது என்ன..?

கோவை மக்கள் ஒற்றுமை மேடை

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோட்சே தொடர்பாக ஏற்பட்ட விவாதம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கோட்சே தொடர்பாக வாக்குவாதம்... வலுக்கும் எதிர்ப்பு! - கோவையில் நடந்தது என்ன..?

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோட்சே தொடர்பாக ஏற்பட்ட விவாதம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
கோவை மக்கள் ஒற்றுமை மேடை

மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, கோவை சிவானந்தா காலனி பகுதியில், `மக்கள் ஒற்றுமை மேடை’ சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கோவை மக்கள் ஒற்றுமை மேடை
கோவை மக்கள் ஒற்றுமை மேடை

ஆனால், காவல்துறை தரப்பில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில், ‘இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட...’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. காவல்துறையினர் அதை அகற்றும்படி கூறினர். இதையடுத்து அதில், `இந்து' என்கிற வார்த்தை மட்டும் மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தொடர்ந்தது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

அதையடுத்து, உறுதிமொழி நிகழ்ச்சியில், ‘கோட்சேவால் காந்தியடிகள் கொல்லப்பட்டார்’ என்று தெரிவித்தபோது காவல்துறையினர் இடைமறித்தனர். இதன் காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உதவி ஆணையர் சுகுமார், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன், த.பெ.தி.க ராமகிருஷ்ணன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ``நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடமும், தேர்தல் அலுவலகத்திலும் மனு அளித்திருக்கிறோம்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

நீங்கள் அதற்கு எந்த பதிலும் கூறாமல், இப்போது வந்து ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ``காந்தியைச் சுட்டுக் கொன்றது கோட்சே, இந்து போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது'' என்று காவல்துறையினர் சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், ``வேறு யார் கொன்றார்கள்? கோட்சேதான் என்று நீதிமன்றமே தண்டனை விதித்திருக்கிறது. உங்களுக்குத் தெரியாதா?” என்று பதிலளித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், ``நிகழ்ச்சியில் மதச்சார்பின்மையை காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக மற்றும் கேரள ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. அதேபோல, 72 ஆண்டுகளாக காந்தியடிகளின் பாடல்கள் இசைக்கப்பட்டுவந்தன. ஆனால், இந்த முறை அதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். நாங்கள் எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை. நடந்ததைத்தான் கூறுகிறோம். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை சிலர் புகழ்வது வருத்தமளிக்கிறது" என்றார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. காவல்துறையினரின் செயலுக்கு கம்யூனிஸ்டுகள், பெரியார் உணர்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காந்தியைக் கொலை செய்தது கோட்சேதான் என்ற உண்மையை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் ஏன் முயல வேண்டும்? இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தச் சம்பவம் தொடர்பாக வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தன் ட்விட்டர் பக்கத்தில் , ``அதிகாரிகள் நடந்துகொண்ட போக்கு கண்டனத்துக்குரியது. மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.