Published:Updated:

ஸ்டெர்லைட்: `மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்கத் தவறிவிட்டது!' - புத்தக வெளியீட்டில் பகீர்

புத்தக வெளியீடு

பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன் பேசுகையில், ``சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தும் இயற்கையை மாசுபடுத்தவே கூடாது என்று சொல்லவில்லை, குறிப்பிட்ட அளவு மாசுபடுத்திக்கொள்ளலாம் அதற்கு மேல் மாசுபடுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறுகிறது.

ஸ்டெர்லைட்: `மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்கத் தவறிவிட்டது!' - புத்தக வெளியீட்டில் பகீர்

பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன் பேசுகையில், ``சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தும் இயற்கையை மாசுபடுத்தவே கூடாது என்று சொல்லவில்லை, குறிப்பிட்ட அளவு மாசுபடுத்திக்கொள்ளலாம் அதற்கு மேல் மாசுபடுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறுகிறது.

Published:Updated:
புத்தக வெளியீடு

``வேதாந்தா - ஒரு தொடர் குற்றவாளியின் கதை'' என்னும் புத்தக வெளியிட்டு விழா, சென்னை சேப்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், வழக்கறிஞர் அஜிதா, பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், காலநிலை செயற்பாட்டு குழுவை சேர்ந்த பெனிஷா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

புத்தக வெளியீடு!
புத்தக வெளியீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிலத்தையும் நீரையும் தொடர்ந்து மாசுபடுத்தி வந்தது. இதனால் ஆலையை எதிர்த்து 2018-ம் ஆண்டில் மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் நடந்த போராட்டத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இறுதியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் `வேதாந்தா - ஒரு தொடர் குற்றவாளியின் கதை' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு ஒருங்கிணைத்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விழாவில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் பேசுகையில், ``வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை முதன்முதலில் மகராஷ்டிர மாநிலத்தில் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் அரசு ஆலையை மூடியது. அதற்குப் பிறகு, வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் தொடங்கியது.

ஆலை இருக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தோல் வியாதி, கருச்சிதைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வு தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலை முறையான லைசென்ஸ் இல்லாமல் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆலைக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதியரசர் சிவஞானம் அவர்களை எந்த ஒரு பதவி உயர்வும் இல்லாமல் கல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்தனர். அவரின் தியாகம் மகத்தானது" என்றார்.

புத்தக வெளியீடு!
புத்தக வெளியீடு!

வழக்கறிஞர் அஜிதா பேசுகையில், ``வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் மட்டுமல்லாமல் கென்யா, அயர்லாந்து உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஆலையைத் தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் போன்ற சிவப்பு நிற தொழிற்சாலை மக்கள் குடியிருக்கும் பகுதியில் செயல்படவே கூடாது. ஆனால், செயல்படுகிறது. இதனால் நிலம், நீர், காற்று மாசுக்குள்ளாகிறது. மாசடைந்த நீரை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் கருச்சிதைவுக்கு உள்ளாகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு கொடுத்த இடம் 107 ஏக்கர். ஆனால், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளைச் சேமிக்கும் இடமே 147 ஏக்கர் பரப்பளவு. அதிக அளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்து மாசுபடுத்தி வருகிறது. வேதாந்தா போன்ற பெருமுதலாளி நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் தொடர்ந்து சூறையாடி வருகின்றன. ரஷ்யாவின் செர்னோபில், ஜப்பானின் புகோஷிமா அணு உலைகள் போல பெரும் விபத்து ஏற்பட்டாலும் வேறொரு இடத்தில் ஆலையை செயல்படுத்த தொடங்குவார்களே தவிர, ஒருபோதும் மக்கள் நலனில் அக்கறை காட்டமாட்டார்கள்" என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன் பேசுகையில், ``இயற்கை சீரழிவு சார்ந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நிறுவனம்தான் தங்கள் மீது குற்றமில்லை என்று நிரூபிக்க வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் அப்படி சரியான ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தும் இயற்கையை மாசுபடுத்தவே கூடாது என்று சொல்லவில்லை. குறிப்பிட்ட அளவு மாசுபடுத்திக்கொள்ளலாம் அதற்கு மேல் மாசுபடுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் எந்தளவு மாசுபடுத்தியுள்ளது என்பதை சரியாகக் கண்காணிக்கத் தவறிவிட்டது" என்றார்.

வேதாந்தா - ஒரு தொடர் குற்றவாளியின் கதை
வேதாந்தா - ஒரு தொடர் குற்றவாளியின் கதை

சென்னை காலநிலை செயற்பாட்டாளர் குழுவை சேர்ந்த இளம் செயற்பாட்டாளர் பெனிஷா பேசுகையில், ``சுற்றுச்சூழல் பாதுகாத்தல் என்ற போர்வையில் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்பாட்டாளர்கள் செயல்பட்டு வருவதாக ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் யாரும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராகச் செயல்படவில்லை, இயற்கையை சுரண்டவில்லை. வேதாந்தா போன்ற நிறுவனங்கள்தான் சிலர் மட்டும் பயனடையும் உற்பத்தி முறையை முன்வைக்கிறது. உற்பத்தியான பொருள்கள் எங்கோ செல்ல அதனால் வெளிவரும் குப்பைகள் அப்பாவி மக்கள் இருக்கும் இடங்களில் கொட்டப்படுகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism