Published:Updated:

கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை! - டெல்லி அரசின் குளறுபடி

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கோவிட்-19 பரிசோதனை டேட்டா விவரத்தில் ஜூலை 12 மற்றும் ஜூலை13-க்குமான வேறுபாடு அதிகம் உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எண்ணிக்கை அறிக்கை, முந்தைய நாளைவிட அடுத்த நாள் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி
டெல்லி

டெல்லி அரசு அறிவித்த கொரோனா பரிசோதனைகள் அறிக்கையின்படி, ஞாயிறு (ஜூலை 12) வரை மேற்கொள்ளப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 7,89,853. ஆனால், திங்களன்று (ஜூலை 13) வெளியிடப்பட்ட டேட்டா அறிக்கையோ, அதுவரை 6,92,845 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

கொரோனா வார்டில் தரப்படுகிற 7 மனநல சிகிச்சைகள்!

கோவிட்-19 பரிசோதனை டேட்டா விவரத்தில் ஜூலை 12 மற்றும் ஜூலை13-க்குமான வேறுபாடு அதிகம் உள்ளது. ஜூலை 12 அன்று வெளியிடப்பட்ட மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையைவிட, ஜூலை 13 அன்று வெளியிடப்பட்ட மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் 97,000 பரிசோதனைகள் குறைவாகியுள்ளன.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
கொரோனா வார்டில் இயற்கை மருத்துவரின் ஒரு நாள்!

ஜுலை 13 அறிக்கையை, 'டெல்லிக்கான ஐ.சி.எம்.ஆர் டேட்டாவுடன் இணைந்து வெளியிடப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை இது' என்று தெரிவித்திருக்கிறது டெல்லி அரசு. ஆனால், மொத்தப் பரிசோதனை அறிக்கையில் குறைக்கப்பட்டிருக்கும் இந்த 97,000 பரிசோதனைகள் எதன் அடிப்படையில் குறைக்கப்பட்டிருக்கின்றன என்றோ, அவற்றின் விவரங்கள் குறித்தோ டெல்லி அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு