காவிரி நீர் வழங்குவதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமாக நடந்துகொள்வதாக டெல்டா விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மரபுப்படி டெல்டா மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீரை, தன் சொந்த மாவட்டமான சேலத்துக்குத் தாரைவார்க்க எடப்பாடி துடிப்பதாக எதிர்ப்புக் குரல்கள் வலுத்துவருகின்றன. அதோடு, ‘`அவர் சேலத்துக்கு மட்டுதான் முதல்வரா?’’ என்றும் டெல்டா மக்கள் கொந்தளிக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ‘‘ `565 கோடி ரூபாய் செலவில் கரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளுக்கு உபரிநீீர் கொண்டுசெல்லப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது தவறானது. உபரிநீர் எனச் சொல்வதே, கர்நாடகாவுக்கு மறைமுகமாகத் துணைப்போகக் கூடியதாகும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டா விவசாயிகள் கடுமையான பாதிப்பு களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையால் இந்தப் பகுதி விவசாயிகள் திண்டாடிவருகின்றனர். குறிப்பாக, கல்லணைக் கால்வாய் பாசனத்தை நம்பியிருக்கக் கூடிய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக முதல்வர் சொல்லக்கூடிய `உபரிநீர் திட்டம்’ மூலம் சேலத்துக்குத் தண்ணீர் கொண்டுபோனால், டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமல்ல... மற்ற மாவட்டங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். வெள்ளக்காலங்களில் நீரைச் சேமிக்க வேண்டும் என விரும்பினால், டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே இருக்கும் ஏராளமான ஏரிகளைத் தூர்வாரினாலே போதும்.

நெல் சாகுபடியை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய பகுதி, டெல்டா. இங்கு இதுதான் சாத்தியம். இதற்கு, கூடுதல் தண்ணீர் தேவை. ஆனால், சேலம் அப்படியல்ல. இயல்பாகவே மானாவாரிப் பயிர்கள் விளையக்கூடிய நிலங்கள். அங்கு நெல் சாகுபடியை தமிழக முதல்வர் ஊக்கப்படுத்துகிறார். மரபுக்கு மாறாக முதல்வர் இப்படிச் செய்வது தவறு’’ என்றார்.

தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதி வெ.ஜீவக்குமார், ‘‘ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடியவர், எல்லா மக்களுக்கும் பொதுவாகத்தான் செயல்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியோ, அரசியல் ஆதாயத்துக்காகவும் தன் உற்றார் உறவினர்கள் பயனடைந்தால் போதும் என்ற குறுகிய நோக்கத்தோடும் புதிய உபரிநீர் திட்டத்தைச் சிந்தித்திருக்கிறார். ‘இது செயல்படுத்தப்பட்டால், என் தோட்டத்துக்கும் தண்ணீர் பாயும்’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார்.

இவர் முதலமைச்சராக வந்ததிலிருந்தே, மேட்டூர் அணை திறப்பில் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட அடுத்த சில வாரங்கள் கழித்துதான், சேலம் பகுதிக்குத் தண்ணீர் பாயக்கூடிய கிழக்கு - மேற்கு கால்வாய்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், டெல்டாவுக்குத் தண்ணீர் திறக்கும்போதே, கிழக்கு - மேற்கு கால்வாய்களுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. டெல்டா விவசாயிகளின் நலனையும் தமிழக முதல்வர் கருத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தவொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யக்கூடியதாகத்தான் இருக்கும். புதிய உபரிநீர் திட்டத்தால், டெல்டா விவசாயிகளுக்கு எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. மேட்டூர் அணை சேலத்தில் இருக்கிறது. அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு சில நன்மைகள் செய்துதருவதை எப்படி தவறு எனச் சொல்ல முடியும்? மேட்டூர் அணை திறப்பதில் அவர் ஒருபோதும் பாரபட்சமாக நடந்துகொண்டதே இல்லை’’ என்றார்.

சேலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வையாபுரி, ‘‘எங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். இதற்குத் தீர்வு, மேட்டூர் உபரிநீர் திட்டமல்ல. இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக சோளம், கம்பு, தினை, நிலக்கடலை உள்ளிட்ட புஞ்சை பயிர்கள்தான் சாகுபடி செய்துகொண்டிருந்தோம். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. தமிழக அரசு, இதை ஊக்கப்படுத்த வேண்டும்; இதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். மேட்டூர் உபரிநீர் திட்டம், சுற்றுச்சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியது. சேலம் விவசாயிகளுக்கு ஏற்கெனவே மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் கிடைக்கிறது’’ என்றார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்தத் திட்டத்தை கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதி களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என குரலெழுப்பி யுள்ளதால், டெல்டா மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.