Published:Updated:

அமைச்சர் வருகைக்கு அதிகாரியை அழைத்து ஆலோசித்தாரா திமுக நிர்வாகி?! - கோவை சர்ச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை  திமுக மாவட்டப் பொறுப்பாளருடன் அதிகாரிகள்
கோவை திமுக மாவட்டப் பொறுப்பாளருடன் அதிகாரிகள்

கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் அத்துமீறுவதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும், கோவை மாவட்டத்தில் திமுக-வுக்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை. ஆனாலும் அரசுத்துறைகள், பணிகளில் திமுக-வினர் தொடர்ந்து அத்துமீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்துவருவதாகத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, அரசுப் பணிகளைத் தொடங்கி வைப்பது,

கோவை
கோவை

அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது என்று திமுக நிர்வாகிகள் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு திமுக பிரமுகர்கள் சிலருமே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், ``தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் அவர்களை, கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்” என்று கூறப்பட்டிருக்கிறது.

வரதராஜன் பதிவு
வரதராஜன் பதிவு

அதேபோல, அமைச்சர் சுப்பிரமணியம் வருகைக்காக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர் தமிழ்செல்வன், நகராட்சி ஆணையர் தானமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் வரதராஜனைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் பதிவு போடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ``ஆட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிடினும் அதிகாரிகள் இங்குள்ள திமுக பிரமுகர்களின் பேச்சைத்தான் கேட்க வேண்டுமா? இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?” என்று எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது குறித்து விளக்கம் கேட்க கோவை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணாவைத் தொடர்பு கொண்டபோது,

வரதராஜனுடன் அதிகாரிகள்
வரதராஜனுடன் அதிகாரிகள்

``மெகா தடுப்பூசி முகாமுக்கு அங்கு என்ன மாதிரியான வசதிகள் உள்ளன என்பது தொடர்பாகத்தான் ஆலோசனை நடத்தினோம். அவர் சொல்வதைப்போல ஏதுமில்லை. நான் என்னவென்று விசாரிக்கிறேன்” என்று கூறினார்.

`அந்த உறவை அவர் விடவில்லை..!' - கணவனை கொல்ல கூலிப்படையை ஏவிய கோவை பெண் கைது

இது குறித்து திமுக மாவட்டப் பொறுப்பாளர் வரதராஜனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் தரும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு