Published:Updated:

தரங்கம்பாடி: `தடையை மீறி 4 வழிச்சாலை பணி; பாழான விளைநிலம்!’ - கொந்தளித்த விவசாயிகள்

4 வழிச்சாலை
4 வழிச்சாலை

நான்கு வழிச்சாலைக்காக நெல் சாகுபடி செய்திருந்த விளைநிலத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் நான்கு வழிச்சாலைக்காக நெல் சாகுபடி செய்திருந்த விவசாய நிலத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், ஒன்றுதிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயி செந்தில் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பணி நடைபெற்றது. பணி தொடங்குவது குறித்து, தனக்கு அதிகாரிகள் தகவல் அளிக்காமல் நெல் விதைப்பில் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.

4 வழிச்சாலை
4 வழிச்சாலை

மேலும், நான்கு வழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தியதில் போதிய தொகை வழங்கவில்லை என்றும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், திடீரென்று பணியைத் தொடங்கியதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டனர். அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தரங்கம்பாடி தாசில்தார், காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

`அரசு பஸ்ஸ நிறுத்தலனா சஸ்பெண்டுதான்; குமுறும் நடத்துநர்!'- தேசிய நெடுஞ்சாலை உணவகத்தில் நடப்பது என்ன?

இதுபற்றி NH45A 4 வழிச்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தனிடம் பேசினோம். ``விழுப்புரம் டு நாகை வரையில் சுமார் 179 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் திட்டம் தீட்டினார்கள். அப்படியே கிடப்பில் விட்டுவிட்டு மீண்டும் 2015-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கினார்கள். திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி சொத்தின் வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு இவற்றில் எது அதிகமோ அந்த மதிப்பில் 3 மடங்கு நகரப் பகுதிகளுக்கும், 4 மடங்கு கிராமப் பகுதிகளுக்கும் தர வேண்டும் என்பது சட்டம். ஆனால், சதுரடி ரூ. 300 விலையுள்ள நிலத்திற்கு அரசு ரூ. 6 முதல் 10 வரையில்தான் தர முன்வந்துள்ளது. சிலருக்குத் தந்துள்ளனர்.

4 வழிச்சாலை
4 வழிச்சாலை

பலருக்குத் தரவில்லை. இதனால் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கியுள்ளோம். இப்படி வழக்கு நிலுவையில் உள்ளபோதே, திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சாகுபடி செய்துள்ள வயலில் பள்ளம் தோண்டுவது எந்த விதத்தில் நியாயம்? எனவே மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு