Published:Updated:

`குப்பை அள்ளுவதில் மாமூல்; காட்டன் சூதாட்டத்தில் கமிஷன்?’-சர்ச்சையில் குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் காட்டன் சூதாட்டத்தில் கமிஷன் வாங்குவதாகத் தோற்றுப்போன அ.தி.மு.க வேட்பாளர், வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட விவகாரம் பூதாகரமாகி காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.

DMK MLA Kattavarayan
DMK MLA Kattavarayan

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் களமிறங்கிய கஸ்பா மூர்த்தியைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் காத்தவராயன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அப்போதிலிருந்தே இருவருக்கும் முட்டல் மோதல் இருந்துவருகிறது. பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயனும் தோற்றுப்போன அ.தி.மு.க வேட்பாளர் மூர்த்தியும் மாறிமாறி விமர்சனம் செய்துகொள்கிறார்கள்.

kasba moorthi
kasba moorthi

இந்த நிலையில், வீதியில் சண்டை போடும் அளவுக்கு இருவரின் மோதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-வும் தோற்றுப்போன அ.தி.மு.க வேட்பாளரும் மாறி மாறி பரஸ்பர புகார் அளித்துள்ளனர். குடியாத்தம் தினசரி மார்க்கெட் சுங்க வசூலில் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் மீது மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி அ.தி.மு.க வேட்பாளர் மூர்த்தி நம்மிடம் கூறுகையில், ‘‘என்னைத் தேவையில்லாமல் அந்த எம்.எல்.ஏ-தான் விமர்சனம் செய்கிறார். தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்க மைத்துனரின் பெயரில் டெண்டர் எடுத்திருக்கிறேன். வியாபாரிகளிடம் நான் மிரட்டி சுங்கம் வசூலிப்பதாகவும் தக்காளி கூடைகளை எட்டி உதைத்து அராஜகமாக நடந்துகொள்வதாகவும் எம்.எல்.ஏ காத்தவராயன் பொய்யாகப் பேசிவருகிறார். 

என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. நான் எம்.எல்.ஏ-வாக இருந்தும் குடிசையில்தான் வசிக்கிறேன்.
தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன்

லாட்டரி சீட்டு, காட்டன் சூதாட்டம், பட்டாசுக் கடை, குப்பை வாருபவர்களை மிரட்டி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் மாமூல் வசூலிக்கிறார். இதை, நான் வாட்ஸ் அப்பில் பதிவிட்டேன். நான் பொய் சொல்லவில்லை. லாட்டரியை நடத்துவதே எம்.எல்.ஏ-வுக்கு வேண்டப்பட்டவர்தான். என்னை மிரட்டும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் விமர்சனம் செய்வதால் தி.மு.க எம்.எல்.ஏ மீது போலீஸில் புகார் அளித்திருக்கிறேன்’’ என்றார்.

இந்தப் புகார் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயனிடம் பேசினோம். ``குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் வெற்றிபெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் தோற்றுப்போன அ.தி.மு.க வேட்பாளர் பொய்யான தகவல்களைப் பதிவிடுகிறார். என் மீது அவர் களங்கம் ஏற்படுத்த முயல்வதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். தோல்வியால் அவர் சைக்கோவாகிவிட்டார் என்று அவர் சார்ந்த அ.தி.மு.க-வினரே சொல்கிறார்கள்.

DMK MLA Kattavarayan
DMK MLA Kattavarayan

நான் உருட்டல் மிரட்டல் செய்பவன் இல்லை. அதனால்தான் மக்கள் எனக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். காய்கறி மார்க்கெட், உழவர் சந்தையில் இருக்கும் வியாபாரிகளிடம் எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் என்றேன். இதில் என்ன தவறு இருக்கிறது. வியாபாரிகளிடம் பிடுங்கி தின்பதே அவர்தான். நான் இன்னும் குடிசையில்தான் இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு உண்மையில்லை’’ என்றார்.