Published:Updated:

நீலகிரி: வாட்டர் பாட்டில் சர்ச்சையில் வனத்துறை அமைச்சர்! - வன உயிரின வார விழாவில் நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

பிளாஸ்டிக் தடையை கடுமையாகப் பின்பற்றிவரும் நீலகிரியில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வனத்துறை அமைச்சரே உத்தரவை மதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி‌‌ மலைகள், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கின்றன. நீலகிரியில் அதிகரித்துவரும் மக்கள்தொகைப் பெருக்கம், சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாக‌ சூழலியலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன.

நீலகிரி
நீலகிரி

நீலகிரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதிலும் குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளாகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

நீலகிரி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டுயானை; துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த கொடூரம்!

இதன் ஒரு கட்டமாகவே நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர், குளிர்பானங்களை விற்பனை செய்ய தடை விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர், குளிர்பானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

மேலும் பொதுவெளிகளில் மக்களின் குடிநீர்த் தேவைக்காக பல இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்-களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவது கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னோடியாக இருக்கவேண்டிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரைப் பயன்படுத்திவருவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் கூடலூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின்போதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்‌களில் குடிநீரைவைத்திருந்த போட்டோ, வீடியோவை சமூக வலைளங்களில் பதிவு செய்து கடுமையாக விமர்சித்துவருகின்றனர் நீலகிரி மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பிளாஸ்டிக் ஃப்ரீ' என வரவேண்டும் - கூகுளுக்கு கடிதம் எழுதிய நீலகிரி ஆட்சியர்!

அமைச்சரின் இந்தச் செயல் குறித்து சூழலியல் செயற்பாட்டாளர்கள், ``சமீபத்தில் கூடலூர் நாடுகாணி பகுதியில் நடந்த வன உயிரின வார விழாவில் பங்கேற்ற அமைச்சர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்ற‌ அனைவரையும்விட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முன்னோடியாக இருக்கவேண்டிய பொறுப்பு வனத்துறை அமைச்சருக்கே இருக்கிறது. அதுவும் இவர் இதே மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் நபர். பொறுப்பிலிருக்கும் அமைச்சரே இப்படி உத்தரவை மதிக்காதது வேதனையாக இருக்கிறது" என்கின்றனர்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

இந்தச் சர்ச்சை குறித்து வனத்துறை அமைச்சர் தரப்பில் பேசினோம். "பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரை நாங்கள் எடுத்துச் செல்வதில்லை. ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்கிறவர்கள், வைத்துவிடுகிறார்கள்" என்கிறனர். மாவட்ட நிர்வாகம், இந்த விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே, சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு