Published:Updated:

`விருப்பப்பட்டுதான் தோண்டினேன்!’ - சவக்குழி விவகாரத்தில் ஒரேநாளில் பல்டியடித்த ஊராட்சித் தலைவர்

ஊராட்சித் தலைவர் முருகேசன்

துக்கத்துக்குச் சென்ற இடத்தில் தன்னை சவக்குழியைத் தோண்ட வைத்ததாக குற்றம் சுமத்திய அரியாக்குஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர், பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

`விருப்பப்பட்டுதான் தோண்டினேன்!’ - சவக்குழி விவகாரத்தில் ஒரேநாளில் பல்டியடித்த ஊராட்சித் தலைவர்

துக்கத்துக்குச் சென்ற இடத்தில் தன்னை சவக்குழியைத் தோண்ட வைத்ததாக குற்றம் சுமத்திய அரியாக்குஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர், பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஊராட்சித் தலைவர் முருகேசன்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் இருக்கிறது அரியாக்குஞ்சூர் ஊராட்சி. சுமார் 700 வாக்காளர்கள் இருக்கும் இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இருளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்காக இந்தப் பகுதி ஒதுக்கப்பட்டதால், சின்னகல்தாம்பாடியைச் சேர்ந்த இருளர் பிரிவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஒருசில மாதங்களில் அரசு ஒப்பந்தங்கள், பணம் எனப் புரளும்போது, முருகேசன் மின் இணைப்புகூட இல்லாத வீட்டில்தான் தற்போதும் வசித்து வருகிறார்.

சவக்குழி தோண்டும் முருகேசன்
சவக்குழி தோண்டும் முருகேசன்

இந்தநிலையில், நேற்று முன்தினம் துக்கம் விசாரிக்கச்சென்ற இடத்தில் இவரை சவக்குழி தோண்டவிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, ``ஊராட்சித் தலைவரான என்னை கொத்தடிமைப் போல நடத்தி ஆதிக்க சாதியினர் வேலை வாங்குகிறார்கள். சாவுக்குப் போன என்னை நீ குழி வெட்டுவதற்குத்தான் லாயக்கு. போய் குழியை வெட்டு என்று சொன்னார்கள்” என்று தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்தார் முருகேசன்.

அதேபோல மற்றொரு வீடியோவில், ``கஷ்டப்பட்டு குழி வெட்டினேன் சார்” என்று கைகளை காட்டும் முருகேசன், ``நீ சம்பாதிச்சி எடுத்துட்டு வந்து நாங்க போடுறத போல நீயும் மாலையைப் போடுனு சொன்னார் (துணைத்தலைவர் சிவானந்தம்). நம்மள வேத்துமையாதான பாத்துட்டாங்கனு ரொம்ப மனசு கஷ்டத்தோட குழியைத் தோண்டினேன். அடிக்கடி கையொப்பம் மட்டும் எங்கிட்ட வாங்கிட்டுப் போவாங்க. பதவி ஏத்துக்கிட்ட அன்னைக்கு மட்டும் அந்த ஆபீஸ்ல உக்காந்தேன். அதுக்கப்புறம் போகல” என்று கூறியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒட்டுமொத்த தமிழகத்தையும் இந்தச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் இன்று முருகேசன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. தன் மனைவியுடன் முருகேசன் பேசும் அந்த வீடியோவில், ``நேத்து அப்படி சொல்லச் சொன்னாங்க. எனக்குத் தெரியாத சுயநினைவுலதான் நான் அப்படி சொல்லிட்டேனே தவிர, அவங்களும் எந்தக் குறையும் சொல்லல, நானும் எந்தக் குறையும் நினைச்சுக்கல. 10 ரூபாய் என் கைல இல்லாத குறைக்கு நானே விருப்பப்பட்டு குழிதோண்டுனது உண்மை” என்று அப்பாவியாகப் பேசுகிறார்.

மனைவியுடன் சவக்குழி தோண்டும் ஊராட்சித் தலைவர் முருகேசன்
மனைவியுடன் சவக்குழி தோண்டும் ஊராட்சித் தலைவர் முருகேசன்

முருகேசனின் முரண்பாடான பேட்டி குறித்து, மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் கதிரிடம் பேசினோம். ``நேற்று முன்தினம் வெளியான செய்திகளை அடுத்து எங்கள் குழு நேராகச் சென்று முருகேசனை சந்தித்தது. அப்போது தன்னை ஊராட்சித் தலைவராக நடத்துவதில்லை என்றும் மதிப்பதில்லை என்றும் கூறினார். சிறிது நேரத்தில் அங்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனை தனியாக சந்தித்து 3 மணிநேரம் பேசியிருக்கிறார்.

அதையடுத்து நம்மிடம் பேசிய முருகேசன், தன்னை யாரும் குழி தோண்டச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்று கூறினார். அதேசமயம், `பேருக்குத்தான் நான் தலைவர். கையொப்பம் மட்டும்தான் போடுவேன்' என்று கூறினார். `நானேதான் குழி தோண்டினேன்' என்று தற்போது அவர் மாற்றிப் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், ஊராட்சித் தலைவர் ஒருவரை குழிதோண்டும் அளவுக்குத்தான் நமது நிர்வாகம் வைத்திருக்கிறது என்பது எவ்வளவு கேவலம். அவரைக் கட்டாயப்படுத்தி குழியைத் தோண்ட வைத்திருந்தால் அவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது அந்த மாவட்ட நிர்வாகத்துக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

அதனால் சம்பவத்தை மறைப்பதற்காக அதிகாரிகள் சென்று அவரிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள். திண்டுக்கல்லில் இதேபோன்றுதான் ஒரு தலைவரை சேரில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்தார்கள். விவகாரம் பெரிதாக வெடித்ததும், `நானேதான் விருப்பப்பட்டு தரையில் அமர்ந்தேன்' என்று அந்தத் தலைவரே பேட்டி கொடுத்தார். இப்படி அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் வாயை அடைப்பதில்தான் முனைப்பு காட்டுகிறார்களே தவிர, பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில்லை. பஞ்சாயத்துத் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்தாலே அவர்கள் மீது வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்யலாம்.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

எங்களிடம் பேசும்போது, `நான் பேருக்குத்தான் தலைவரா இருக்கிறேன்' என்று தெளிவாகக் கூறினார். அப்படி என்றால் குறுக்கீடு இருக்கிறது என்றுதானே அர்த்தம். தலைவர் மட்டுமல்ல கட்டாயப்படுத்தி ஒருவரை குழிதோண்ட வைத்தாலே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யலாம். முருகேசனுக்கு செக் புத்தகத்தில் கையொப்பம் போடும் சிறப்பு அதிகாரத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும்” என்றார்.