Published:Updated:

`அதிகரித்த உயிரிழப்பு; ரத்தக்குழாய்கள் சிதைவு?’ - வென்டிலேட்டர் சர்ச்சையில் குஜராத் அரசு

குஜராத் அரசு

குஜராத்தில் வென்டிலேட்டர் வாங்குவதில் நடந்த முறைகேடு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`அதிகரித்த உயிரிழப்பு; ரத்தக்குழாய்கள் சிதைவு?’ - வென்டிலேட்டர் சர்ச்சையில் குஜராத் அரசு

குஜராத்தில் வென்டிலேட்டர் வாங்குவதில் நடந்த முறைகேடு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
குஜராத் அரசு

கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிக்கும் இந்த நேரத்தில் அதற்கான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை அனைத்து உலக நாடுகளும் எதிர்கொள்கின்றன. அதே சூழ்நிலைதான் இந்தியாவிலும் நிலவுகிறது. கொரோனாவை எதிர்ப்பதற்கு அத்தியாவசியமாக இருக்கும் என் 95 முகமூடிகள், சானிடைசர்கள் மற்றும் சிகிச்சையளிக்கத் தேவையான வென்டிலேட்டர்களின் பற்றாக்குறை இங்கு சற்று அதிகமாகவே உள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இதனால் இந்தியாவில் இருக்கும் பல தனியார் நிறுவனங்களும் மாஸ்க் மற்றும் வென்டிலேட்டர் தயாரிக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கின. அப்படி குஜராத், ராஜ்கோட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜோதி சி.என்.சி என்ற ஒரு தனியார் நிறுவனம் மலிவான விலைக்கு வென்டிலேட்டர் தயாரித்தது. இந்நிறுவனம் வெறும் 10 - 15 நாள்களில் 1,000 வென்டிலேட்டரைத் தயாரித்து அகமதாபாத் அரசு மருத்துமனைக்கு நன்கொடையாக வழங்கியது. ராஜ்கோட் நிறுவனம் தயாரித்த வென்டிலேட்டர் சிறப்பாகச் செயல்படுவதாக சோதனை அதிகாரியும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அவற்றைப் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். இது மட்டுமல்லாது தன் மாநிலத்துக்குத் தேவையான மேலும் பல வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் டெண்டரை ராஜ்கோட் நிறுவனத்துக்கே வழங்கினார். மலிவான விலைக்கு வென்டிலேட்டர் கிடைப்பதால் புதுச்சேரி போன்ற சில மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களுக்குத் தேவையான வென்டிலேட்டர் ஆர்டரை ராஜ்கோட் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தன.

வென்டிலேட்டர்
வென்டிலேட்டர்

இந்நிலையில், ஜோதி சி.என்.சி நிறுவனம் தயாரித்த வென்டிலேட்டர்கள் முறையாகச் செயல்படவில்லை என அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் குஜராத் மாநில துணை முதல்வருக்கு புகார் கடிதம் எழுதினர். பொதுவாக வென்டிலேட்டர்கள் சுவாச அமைப்புக்கு ஆதரவளித்து நோயாளிகள் மூச்சுவிட சிரமப்படுவதைக் குறைக்கும். ஆனால், இந்நிறுவனத்தின் வென்டிலேட்டர்கள் சரியான முடிவுகளைக் காண்பிக்கவில்லை என்றும் தரமான வேறு வென்டிலேட்டர்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரச்னையின் ஆரம்பப் புள்ளியாக இருந்த இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. முதல்வர் விஜய் ரூபானியின் நண்பர் நிறுவனம்தான் ராஜ்கோட், அதனால் எதையும் முழுமையாக சோதிக்காமல் அந்நிறுவனத்துக்கு வென்டிலேட்டர் ஆர்டரைக் கொடுத்துள்ளார் எனப் புகார்கள் கிளம்பின.

குஜராத்தில் 13,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 802 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் அங்கு உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது. இதற்கு செயல்படாத வென்டிலேட்டர்கள்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

`அகமதாபாத் அரசு மருத்துவமனையில் ராஜ்கோட் நிறுவனத்தின் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தியதால் அவை நோயாளிகளின் ரத்தக்குழாய்களை சிதைத்துவிட்டன. கொரோனா பரவலை எதிர்கொள்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. விஜய் ரூபானி, தன் நண்பர்களுக்கு வென்டிலேட்டர் தயாரிக்க கொடுத்து மக்கள் உயிரைப் பணையம் வைக்கிறார்’ என்று அம்மாநில காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் பரேஷ் தனனி விமர்சித்திருந்தார்.

இந்த வென்டிலேட்டர் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபற்றி பிபிசி ஊடகத்திடம் பேசியுள்ள அகமதாபாத் மருத்துவ அமைப்பின் அதிகாரி பிபின் படேல், ``ராஜ்கோட் நிறுவனத்தின் வென்டிலேட்டர்களை, வென்டிலேட்டர் என்றே அழைக்க முடியாது. அதில் எந்த முறையான வசதிகளும் இல்லை. ஆக்சிஜன் மீட்டர் இல்லை. ஈரப்பதமான ஆக்சிஜன் வருவதற்கான வசதி இல்லை. அதனால் நீண்ட நேரத்துக்கு இந்த வென்டிலேட்டரை நோயாளிக்கு அளிக்க முடியாது. இது அவசர நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிரைப் பறிக்கும் அபாயத்தில் வென்டிலேட்டர்கள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோதி நிறுவன வென்டிலேட்டர்
ஜோதி நிறுவன வென்டிலேட்டர்

வென்டிலேட்டர் பிரச்னையால் குஜராத் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுக்கும் தகவல் தெரிவிக்காமல் அகமதாபாத் கலெக்டரை மத்திய அரசு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த வென்டிலேட்டர் நிறுவனத்துடன் தொடர்புடைய சில அதிகாரிகளும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் ஆர்டர்களைத் திரும்ப பெறும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ராஜ்கோட் நிறுவனத்தின் தலைவர் பராக்கிராம்சிங் ஜடேஜா இந்த விவகாரம் தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ``நாங்கள் தயாரித்தது முழுமையான வென்டிலேட்டர் இல்லை என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். மிதமான தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டது’’ என்று பேசியுள்ளார். இது முதல்வருக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism