Published:Updated:

மத்திய அரசின் நவீன கழிப்பிட திட்டம்: ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள்!

ஒரே கழிவறையில் சிறிய தடுப்பை ஏற்படுத்தி இரண்டு கழிப்பிடங்கள் அமைத்திருப்பதற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கழிவறை புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

மத்திய அரசின் நவீன கழிப்பிட திட்டம்: ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

ஒரே கழிவறையில் சிறிய தடுப்பை ஏற்படுத்தி இரண்டு கழிப்பிடங்கள் அமைத்திருப்பதற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கழிவறை புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

Published:Updated:
ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள்!

நீலகிரி மாவட்டம், நெல்லயிளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பகுதியில் நகராட்சி கழிவறை ஒன்று பராமரிப்பின்றி இருந்தது. அதனால், மக்கள் அதைப் பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில், மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தக் கழிவறை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணியை நெல்லியாளம் நகராட்சி மேற்கொண்டு வந்தது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒரே கழிவறையில் சிறிய தடுப்பை ஏற்படுத்தி இரண்டு கழிப்பிடங்கள் அமைத்திருப்பது தெரியவந்தது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கழிவறை புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர் அம்ரித், இரண்டு கழிப்பிடங்களுக்கும் இடையே உடனடியாக தடுப்பு சுவர் அமைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

கழிவறை
கழிவறை

இந்த விவகாரம் குறித்து நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். ``மத்திய அரசின் நவீன கழிவறை திட்டம் வகுத்து கொடுத்த வரைமுறையின் அடிப்படையில்தான் கட்டியிருக்கிறோம். சிறுவர் சிறுமியர்களுக்கான கழிவறையை இந்த முறையில்தான் கட்டச் சொல்லி விதிமுறையில் இருக்கிறது. இதை பெரிதுபடுத்துகிறார்கள். இதே கழிவறையில் ஆண்கள், பெண்களுக்கான கழிவறைகளும் இருக்கின்றன" என்றனர்.