Published:Updated:

காளி போஸ்டர்: ``இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது..!" - எதிர்வினை குறித்து லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை

கனடாவின் டொராண்டோவின் தெருக்களில் ஒரு பெண் உலா வருவதைப் பற்றிய நிகழ்த்துக்கலை ஆவணப்படம் என்று லீனா மணிமேகலை விளக்கமளித்தும், பல வலதுசாரிக் குழுக்கள் அவருக்கு எதிராகப் புகார்களைப் பதிவுசெய்து வருகின்றன.

காளி போஸ்டர்: ``இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது..!" - எதிர்வினை குறித்து லீனா மணிமேகலை

கனடாவின் டொராண்டோவின் தெருக்களில் ஒரு பெண் உலா வருவதைப் பற்றிய நிகழ்த்துக்கலை ஆவணப்படம் என்று லீனா மணிமேகலை விளக்கமளித்தும், பல வலதுசாரிக் குழுக்கள் அவருக்கு எதிராகப் புகார்களைப் பதிவுசெய்து வருகின்றன.

Published:Updated:
லீனா மணிமேகலை

மதுரையைச் சேர்ந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கத்தில் `காளி’ என்கிற நிகழ்த்துக்கலை ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது. அதில் காளி வேடத்தில் பெண் ஒருவர் புகைபிடிப்பதுபோல் இருப்பதற்கு, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. கனடாவின் டொராண்டோவின் தெருக்களில் ஒரு பெண் உலா வருவதைப் பற்றிய நிகழ்த்துக்கலை ஆவணப்படம் என்று லீனா மணிமேகலை விளக்கமளித்தும், பல வலதுசாரிக் குழுக்கள் அவருக்கு எதிராகப் புகார்களைப் பதிவுசெய்து வருகின்றன.

லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை

எதிர்ப்பு வலுத்ததையடுத்து கனடாவின் ஆகா கான் அருங்காட்சியகம் நிகழ்த்துக்கலை ஆவணப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அகற்றி, வருத்தமும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் சிவன், பார்வதி வேடமணிந்த கிராமப்புற கலைஞர்கள் புகைப்பிடிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து, ``நாட்டுப்புற நாடகக் கலைஞர்களின் கலைகள் குறித்து பாஜகவின் ஊதியம் பெறும் ட்ரோல் ஆர்மிக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த படம் என்னுடைய படத்தில் வருபவை அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவிலிருந்து வரும் இது போன்ற கலைகளை, சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு, மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது" எனப் பதிவிட்டிருக்கிறார்.