Published:Updated:

பத்து வருட உழைப்பு ரூ.1,200 கோடி செலவு... அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியல் மாயமானது எப்படி?

என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பு
என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பு

அஸ்ஸாமில் 10 வருட காலமாக உழைத்து சேகரிக்கப்பட்ட என்.ஆர்.சி பட்டியல் காணாமல் போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றும் வகையில், தயாரிக்கப்பட்ட என்.ஆர்.சி பட்டியல் காணாமல் போய் விட்டதாகவும் விப்ரோ நிறுவனத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதால் இணையதளத்திலிருந்து அழிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலைத் தயாரிக்க ரூ.1,220 கோடி செலவிடப்பட்டது. 52,000 அரசு ஊழியர்கள் பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து இதைத் தயாரித்தார்கள்.

அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பு
அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பு

இந்தியாவில், அஸ்ஸாமில்தான் சட்டவிரோதக் குடியேறிகள் அதிகம். அதனால், அஸ்ஸாமிலிருந்து இவர்களை வெளியேற்றவேண்டுமென்பது அந்த மாநில மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.1995-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரதீக் ஹஜீலா தலைமையில், அஸ்ஸாமில் என்.ஆர்.சி பட்டியல் தயாரிக்கப்பட்டது. 3.29 கோடி விண்ணப்பங்கள் மற்றும் 6 கோடி ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. 2019- ம் ஆண்டு ஆகஸ்ட் 31 - ந் தேதி, இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர்

`ரூஃபிங் வேலைக்குப் போனேன்; 5 நரம்பு கட்டாகிருச்சு!' - கலங்கவைக்கும் `குக் வித் கோமாளி’ புகழ்

ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீக் ஹஜீலா மீதும் பல்வேறு புகார்கள் எழுந்தன. புள்ளி விவரங்களைத் தவறாகக் கையாண்டார், நிதிமுறைகேட்டில் ஈடுபட்டார் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் என்.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட, ஹஜீலா மத்தியப் பிரதேசத்துக்குச் சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 12- ம் தேதி என்.ஆர்.சி பட்டியல் இணையதளத்திலிருந்து திடீரென்று காணாமல் போய் விட்டது என்று தற்போதைய என்.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மா தெரிவித்துள்ளார்.

என்.ஆர்.சியில் பதிய கூட்டம்
என்.ஆர்.சியில் பதிய கூட்டம்

விப்ரோ நிறுவனத்திடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காத காரணத்தினால், என்.ஆர்.சி பட்டியல் காணாமல் போனதாகச் சொல்லப்படுகிறது. பிரதீக் ஹஜீலா இருந்த கட்டத்தில் 2014- ம் ஆண்டு முதல் 2019- ம் ஆண்டு வரை என்.ஆர்.சி தயாரிப்பில் பணியாற்றிய 32 வயதுப் பெண் மீது இது தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் இரு அலுவலக இமெயில் ஐ.டி-யின் பாஸ்வேர்டை தன்னிடத்தில் தர மறுத்ததாகவும் ஹிதேஷ் தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு