Published:Updated:

`சம்பள பாக்கியைத் திரும்பத் தாருங்கள்'- ஐ.ஐ.எம். அகமதாபாத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தொழிலாளர்கள்!

IIM - ahmedabad

ஐ.ஐ.எம் வளாகத்தில் புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணிகளை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

`சம்பள பாக்கியைத் திரும்பத் தாருங்கள்'- ஐ.ஐ.எம். அகமதாபாத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தொழிலாளர்கள்!

ஐ.ஐ.எம் வளாகத்தில் புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணிகளை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

Published:Updated:
IIM - ahmedabad

இந்தியாவின் மிக முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எம் அகமதாபாத் மற்றும் குஜராத் அரசாங்கத்துக்கு தங்களது சம்பளப் பாக்கியைத் திரும்பத் தரக்கேட்டு அங்கே பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தங்களது சொந்த ஊருக்குத் திரும்பச் செல்ல ஐ.ஐ.எம். நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

legal notice
legal notice

ஐ.ஐ.எம் வளாகத்தில் புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணிகளை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் புதிய கட்டட வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், தங்கும் இடம் சுகாதார வசதிகள் மற்றும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாததைக் காரணம்காட்டி தங்களது சம்பளத்தைத் திரும்பத் தரும்படியும் தாங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆவன செய்து தரும்படியும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஐ.ஐ.எம் இயக்குநரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கை கடந்த திங்கள் அன்று போராட்டமாக வெடித்தது. போராட்டத்தை ஒடுக்கிய போலீஸார் இது தொடர்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரைக் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஐ.ஐ.எம் இயக்குநருக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீஸில் “கடந்த இரண்டு மாதங்களாகக் கல்லூரி நிர்வாகம் எங்களுக்குச் சம்பளம் தரவில்லை. 20 குழந்தைகள் மற்றும் 25-30 பெண்களுடன் இங்கே வசித்து வருகிறோம். ஆனால், கொரோனா காலத்தில் எங்களுக்குப் போதுமான சுகாதாரப் பாதுகாப்பு, உணவு வசதி எதையுமே நிர்வாகம் செய்துதரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளனர்.