Published:Updated:

`தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களைப் புறக்கணிப்பது நியாயமா?!’ - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி

டாக்டர் ராமதாஸ்
News
டாக்டர் ராமதாஸ்

`வடதமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் தேசப்பற்றும் தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!’ - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

`தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களைப் புறக்கணிப்பது நியாயமா?!’ - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி

`வடதமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் தேசப்பற்றும் தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!’ - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

Published:Updated:
டாக்டர் ராமதாஸ்
News
டாக்டர் ராமதாஸ்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறவிருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாகவைத்து வாகனம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் நிபுணர்குழு இந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், இன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா, காமராஜர் சாலையில் தேசியக்கொடியை ஏற்றி பின்னர், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட, தமிழக அலங்கார ஊர்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்திகள் அணிவகுத்துவந்தன.

இந்த ஊர்திகள், தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காகப் போராடிய, உயிர்நீத்த வடதமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

அலங்கார ஊர்திக
அலங்கார ஊர்திக

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும் தீரமும் காந்தியடிகளை வியக்கவைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும் தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!. டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காகக் கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களைப் புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இந்தத் தவறு நிகழாமல் உறுதிசெய்ய வேண்டும்" என விமர்சித்துள்ளார்.