Published:Updated:

உதவியாளருக்கு `பளார்’ விட்ட சித்தராமையா - வைரலாகும் வீடியோ

Siddaramaiah
News
Siddaramaiah ( ANI )

மைசூர் விமானநிலையத்தில் சித்தராமையா உதவியாளரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் சமீபத்தில் ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு பதவி ஏற்றுள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலிருந்தே கர்நாடக அரசியல் பரபரப்பாக உள்ளது. கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்திவந்த நிலையில் நேற்று கைது செய்தது. சிவக்குமார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி நேற்று இரவு கைது செய்தது. இதன்காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.

Siddaramaiah
Siddaramaiah

சிவக்குமாரின் கைது நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி விடுத்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தன் உதவியாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு சித்தராமையா புறப்பட்டார். தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அவரின் உதவியாளர் சித்தராமையாவிடம் ஏதோ சொல்ல அந்த நபரின் கன்னத்தில் பளார் விட்டார். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டி.கே.சிவக்குமார் கைதாகியுள்ள நிலையில் சித்தராமையாவின் இந்தச் செயல் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையா இவ்வாறு நடத்துகொள்வது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டத்தில் பெண்ணின் கைகளில் இருந்த மைக்கைப் பிடுங்கி அவரைத் தாக்கினார். இதுதொடர்பாகப் பின்னர் விளக்கமளித்தவர், அவர் என் சகோதரி போன்றவர் எனக் கூறினார்.