Published:Updated:

`மக்கள் வரமாட்டார்கள்; வெளியில் சொல்லலாமா?' - #Corona சர்ச்சையில் கேரள மருத்துவமனை

ஷினு சியாமளன்
News
ஷினு சியாமளன்

ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மறுநாளே மருத்துவமனை நிர்வாகம், அவரை வேலையைவிட்டு திடீரென நீக்கி அதிர்ச்சி அளித்துள்ளது.

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கோபத்துடன் பேசினார். அதற்குக் காரணம், ஒரு குடும்பம். இத்தாலியில் இருந்து கொச்சி திரும்பிய அந்தக் குடும்பத்தினர் ஏர்போட்டில் மருத்துவ சோதனை செய்துகொள்ளாமல் வீட்டுக்கு வந்திருக்கிறது. ஆனால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களால் உறவினர்கள் இருவருக்கும் கொரோனா பரவியது. தங்களது பயணத்தை மறைத்த குடும்பத்தால் இப்போது மீண்டும் கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 12 பேர் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

இதனால்தான் அன்றைக்கு அமைச்சர் கோபமாகப் பேசியிருந்தார். வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், அரசை அணுகி மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இன்று பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயனும் இந்த விவகாரத்தை வலியுறுத்தியிருந்தார்.

நிலைமை இப்படியிருக்க, திருச்சூர் மாவட்டத்தில் தளிக்குளம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஷினு சியாமளன் என்ற பெண் மருத்துவர் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசியவர், ``கத்தாரில் இருந்து திரும்பிய நபர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அதிக காய்ச்சலுடன் வந்திருந்த அந்த நபரிடம் விவரங்களைக் கேட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கத்தாரில் இருந்து சமீபத்தில்தான் ஊருக்கு வந்ததாகச் சொன்னவர், அவர் வந்த தேதியைச் சொல்ல மறுத்தார். காய்ச்சல் அதிக டெம்ப்ரேச்சர் இருந்த நிலையில், தனது பயண விவரங்களை அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கவில்லை. நான் கொரோனா அச்சம் குறித்த விவரங்களை எடுத்துச் சொல்லி, அவரின் பயண விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்தும்படி கூறினேன்.

ஆனால், அதை மறுத்த அந்த நபர், `எனக்கு கொரோனா இல்லை. நான் மீண்டும் நாளை கத்தாருக்குச் செல்ல வேண்டும்' எனக் கூறி மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுவிட்டார். உடனடியாக எனக்குத் தெரிந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் காவல்நிலையத்திலும் தெரிவித்தேன்.

ஷினு சியாமளன்
ஷினு சியாமளன்

ஆனால், ஒரு பயனும் இல்லை. பின்னர் மருத்துவமனை காவலர்களிடம் அந்த நபர் வந்த வண்டியின் எண் மூலம் அவரது விவரங்களைச் சேகரித்து அவரின் இருப்பிடத்தை அறிய முயன்றேன். விவரங்கள் திரட்டும்போது, அவர் கத்தார் சென்றுவிட்டார் என்றே எனக்குத் தகவல் வந்தது. மேலும், கத்தார் விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் இருப்பதை அறிந்து, தற்போது அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத்தான் நான் இங்கு செய்ய சொன்னேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். மக்கள் இப்படி இருக்கலாமா? அரசுக்கு ஒத்துழையுங்கள்" எனப் பேசியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மறுநாளே மருத்துவமனை நிர்வாகம் அவரை வேலையைவிட்டு திடீரென நீக்கி அதிர்ச்சி அளித்துள்ளது. வேலையைவிட்டு நீக்கியதற்கான காரணமாக, மருத்துவமனை நிர்வாகம் சொன்ன பதில்தான் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் உள்ள மனிதர் மருத்துவமனைக்கு வந்தது தெரிந்ததால், மற்ற மக்கள் வருவதை நிறுத்திவிடுவார்கள்.

அதை ஏன் ஃபேஸ்புக்கிலும் அரசுக்கும் சொன்னீர்கள் என்று மருத்துவர் ஷினுவிடம் கேட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் ஷினு, தனது பணியைத் தானே செய்துள்ளார் என்று அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

ஷினு சியாமலன்
ஷினு சியாமலன்

இந்த விவகாரம் தொடர்பாக ஷினு தனது ஃபேஸ்புக்கில் மீண்டும் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ``எனது முன்னாள் முதலாளி செய்ய விரும்பியதைப்போல இது மறைக்கப்பட வேண்டிய விஷயமல்ல. அவருக்கு உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் மக்கள் கிளீனிக்குக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள் என்று நினைப்பது சுயநலம். நான் என் கடமையைச் செய்துகொண்டிருந்தேன்.

நான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. மீண்டும் அதையே செய்வேன்" என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கேரள சுகாதாரத்துறை தலையிட வேண்டும் என்று நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.