Published:Updated:

தோண்டி எடுக்கப்பட்ட கேரள பெண்ணின் சடலம்: மரணத்தின் மர்மத்தைக் கண்டறிய பரிசோதனை!

Death (Representational Image)

ஹாரிஸ் தன்னுடைய மணிக்கட்டை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, டென்சியை கொலை செய்துள்ளார் என இந்த வழக்கை ஐக்கிய அரபு அமீரக போலீஸார் முடித்தனர்.

தோண்டி எடுக்கப்பட்ட கேரள பெண்ணின் சடலம்: மரணத்தின் மர்மத்தைக் கண்டறிய பரிசோதனை!

ஹாரிஸ் தன்னுடைய மணிக்கட்டை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, டென்சியை கொலை செய்துள்ளார் என இந்த வழக்கை ஐக்கிய அரபு அமீரக போலீஸார் முடித்தனர்.

Published:Updated:
Death (Representational Image)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததாக தெரிவிக்கப்பட்ட 37 வயது பெண்ணின் சடலமானது, மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பெண்ணின் மரணத்துக்கு, ஒரு கும்பல் காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Crime
Crime

கேரளாவைச் சேர்ந்த பெண் டென்சி ஆண்டனி (Densi Antony). மூன்று குழந்தைகளுக்கு தாயான இவருக்கு, அபுதாபியில் 2019-ல் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென இவரும், இவரின் முதலாளி டி.பி.ஹாரிஸும் பிளாட்டில் ஒன்றாக இறந்து கிடந்தனர்.

ஹாரிஸ் தன்னுடைய மணிக்கட்டை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, டென்சியை கொலை செய்துள்ளார் என இந்த வழக்கை ஐக்கிய அரபு அமீரக போலீஸார் முடித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் விபத்து என்றும், பின்னர் தற்கொலை என்றும் டென்சியின் மரணம் அவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அவரின் உடல் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் உள்ள செயின்ட் ஜோசப் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

2019-ம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் ஷபா ஷரீப் என்பவரை, ஷைபீன் அஷ்ரப் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடத்தி, மூலநோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்தின் பொருள்களைக் குறித்த தகவலைக் கேட்டு கொடுமைப்படுத்தி, ஒரு வருடம் கழித்து கொடூரமான முறையில் கொன்றனர். ஷபா காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்தார் மைசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Kidnapping
Kidnapping

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த புனலாய்வு குழு, ஹாரிஸ் மற்றும் டென்சியின் மரணத்தில் ஷைபீன் அஷ்ரப் கும்பல் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

மே மாதம் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன்னுடைய மகன் இறந்தது குறித்து தீவிர விசாரணை செய்யுமாறு, ஹாரிஸின் தாய் போலீஸாரிடம் மனு அளித்தார். ஏனெனில், ஹாரிஸின் முன்னாள் பிசினஸ் பார்ட்னர்தான் அஷ்ரப். ஹாரிஸ் தங்கியிருந்த அதே கட்டடத்தில் ஒரு பிளாட் ஏற்பாடு செய்து அந்தக் கும்பல் தங்கி, அவர்களைத் தாக்கி கொலையை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்தது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 37 வயது பெண்ணின் சடலமானது, மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.