Published:Updated:

ராணிப்பேட்டை: `மருத்துவர் இல்லை; ஆம்புலன்ஸ் தாமதம்!’ - தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

விஜயன்
விஜயன்

பணியில் இல்லாத மருத்துவராலும், தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸாலும் பரிதாபமாக ஓர் தொழிலாளியின் உயிர் பிரிந்திருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், நவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். கூலித்தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி, மகன்கள் இருக்கிறார்கள். இன்று காலை 5 மணியளவில், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் விஜயன் அவதிப்பட்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. செவிலியர்களும் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்
Representational Image

அவர்களை எழுப்பி விஜயனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். செவிலியர்களும் மருத்துவரை அழைக்காமல், முதலுதவி சிகிச்சை அளிப்பதுபோல் அலட்சியமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு செவிலியர்களே பரிந்துரை செய்து 108 ஆம்புலன்ஸுக்கும் போன் செய்திருக்கிறார்கள். ஆனால், மூன்று மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

ஒடிசா: `மோசமான உடல் நிலை; ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உணவு இடைவேளை!’ - குழந்தைக்கு நேர்ந்த சோகம்

இந்த நிலையில், விஜயனின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. அவரைத் தூக்கி ஆம்புலன்ஸில் படுக்க வைத்தபோது அவருக்கு முற்றிலுமாக சுயநினைவு இல்லை. பதறிப்போன செவிலியர்கள், மருத்துவருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அவர் அங்கு வந்து விஜயனின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

விஜயன்
விஜயன்

`விஜயனின் மரணத்துக்குக் காரணம் பணி நேரத்தில் அலட்சியமாக இருந்த மருத்துவர், செவிலியர்கள் மற்றும் காலதாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்தான். அவர்கள்மீது துறைரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று விஜயனின் உறவினர்கள் கண்ணீர்மல்க வலியுறுத்தியிருக்கிறார்கள். பின்னர், விஜயனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு