Published:Updated:

`விசாரணையை வாட்ஸ் அப் வீடியோ காலில் ஒளிபரப்பிய தன்னார்வலர்கள்!’- மேட்டூர் காவல்நிலைய சர்ச்சை

மேட்டூர் காவல் நிலையம்.
மேட்டூர் காவல் நிலையம். ( எம்.விஜயகுமார். )

அங்கிருந்த தன்னார்வலர்கள் அந்த விசாரணையைச் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று புகார் வாசிக்கிறார்கள்.

''அவர்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து எஸ்.ஐ அன்பு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார். அதைக் காவல் நிலையத்திற்குள் இருந்த தன்னார்வலர் ஒருவர் வாட்ஸ் அப்பில் லைவ் வீடியோ மூலம் தன் நண்பர்களுக்கு அனுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. விசாரணைக் கைதிகளையும், மைனர் குற்றவாளிகளின் புகைப்படங்களையும் வெளியிடக் கூடாது என நீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றது''

காவல் நிலையத்திற்குள் விசாரணை ...
காவல் நிலையத்திற்குள் விசாரணை ...

கொரோனா காலத்தில் மேட்டூர் காவல் துறையினருக்கு உதவிக்கு வந்த தன்னார்வலர்களால் மேட்டூர் காவல் நிலையத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது. கொலை வழக்கில் தொடர்புடைய மைனர் குற்றவாளிகளைக் காவல் நிலையத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த தன்னார்வலர்கள் அந்த விசாரணையைச் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று புகார் வாசிக்கிறார்கள்.

`மதுபாட்டில்களில் சரக்குக்குப் பதில் டீ டிகாஷன்..!' -கலால்துறைக்கு அதிர்ச்சி கொடுக்கும் புதுவை போலீஸ்

இதுபற்றி மேட்டூர் வாசிகளிடம் கேட்டதற்கு, ``கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியாக இருப்பதற்கு மேட்டூர் காவல் நிலையத்தில் பல தன்னார்வலர்கள் சேர்ந்து பணியாற்றி வந்தார்கள். இதில் பல குற்றப் பின்னணி உடையவர்களும் சேர்ந்தார்கள். கடந்த 21ம் தேதி மேட்டூர் அரசு தொழில் பயிற்சி மையத்தில் ராஜா, யுவராஜ், விக்கி, வல்லரசு, மூர்த்தி ஆகிய 5 பேரும் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள்.

காவல் நிலையத்துக்குள் விசாரணை ...
காவல் நிலையத்துக்குள் விசாரணை ...

இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து போதையில் இருந்த ராஜா மீது 4 பேரும் சேர்ந்து கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அதையடுத்து மேட்டூர் காவல் துறையினர் 4 பேரையும் 22ம் தேதி கைது செய்தார்கள். அவர்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து எஸ்.ஐ அன்பு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார். அதைக் காவல் நிலையத்திற்குள் இருந்த தன்னார்வலர் ஒருவர் வாட்ஸ் அப்பில் லைவ் வீடியோ மூலம் தன் நண்பர்களுக்கு அனுப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. விசாரணைக் கைதிகளையும், மைனர் குற்றவாளிகளின் புகைப்படங்களையும் வெளியிடக் கூடாது என நீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன. ஆனால், தன்னார்வலர்கள் இந்த வீடியோ வெளியிட்டு இருப்பது மேட்டூர் காவல் நிலையத்திற்குக் பாதுகாப்பற்ற சூழலும், மேட்டூர்க் காவல் துறையினருக்குப் பெரும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது'' என்றார்கள்.

கொலை
கொலை

இதுபற்றி மேட்டூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியனிடம் கேட்டதற்கு, ``கொரோனா காலத்தில் மக்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்களைச் சேர்த்தோம். அவர்களில் குற்றப்பின்னணி உடையவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கொரோனா பணியில் தீவிரமாக இருந்ததால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. அதில், யாரோ விளையாட்டுத் தனமாக ராஜா கொலை வழக்கில் குற்றவாளிகளை விசாரித்துக்கொண்டிருக்கும் போது புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அதையடுத்து நாங்கள் 3 நாள்களாகத் தன்னார்வலர்களை வைத்துக் கொள்வதில்லை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு