Published:Updated:

`மதுரை செல்லும் டேங்கர் லாரி, தேனி வர தாமதம்!' -அதிர்ச்சிக் காரணம் சொல்லும் ஆவின் நிர்வாகம்

பாலை கீழே கொட்டிய உற்பத்தியாளர்கள்.
பாலை கீழே கொட்டிய உற்பத்தியாளர்கள்.

பால் உற்பத்தியாளர்களுக்கும் தேனி ஆவின் நிர்வாகத்திற்குமான பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்!’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்

பாலை கொள்முதல் செய்யாமல், திருப்பி அனுப்பும் தேனி ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்து, மாவட்டத்தில் சில இடங்களில், சாலையில் பாலைக் கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் பால் உற்பத்தியாளர்கள். இச்சம்பவத்தை அடுத்து சில நாள்களில், சுமார் 5,000 லிட்டர் பால், கெட்டுப்போனதாக கூறி, ஆவின் நிர்வாகமே, தேனி வால்கரடு பகுதியில் கொட்டிச் சென்ற சம்பவமும் நடந்தது.

ஆவின் பால்
ஆவின் பால்
 `ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்

இந்த விவகாரம் குறித்து, நம்மிடையே பேசிய பால் உற்பத்தியாளர் ஒருவர், ``வருடத்தில் இந்த மாதம் பொதுவாக மாடுகள் அதிகம் கன்று ஈனும் மாதமாகும். அதனால், இயல்பைக் காட்டிலும் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக, டீ கடைகள் மூடப்பட்டன. எனவே, பால் விற்பனையில் கொஞ்சம் மந்தநிலை இருந்தது.

ஆனால், தற்போது அனைத்தும் சரியான நேரத்தில், தேனி ஆவினுக்கு நாங்கள் பாலை அனுப்புகிறோம். அவ்வாறு அனுப்பும் பாலை அங்குள்ளவர்கள் திருப்பி அனுப்புகின்றனர். நேரம் கடந்து எங்களுக்கு பால் வருவதால், அது கெட்டுப்போய் விடுகிறது. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் காரணம் கேட்டால், சரியாக பதில் கொடுப்பதில்லை.

பலமுறை அழுத்தம் கொடுத்த பின்னர், டேங்கர் லாரி நேரத்துக்கு வரவில்லை. அதனால்தான் பாலை திருப்பி அனுப்புகிறோம் என கூறினார்கள். இது சரியான காரணமாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆவின் நிர்வாகத்தின் செயலைப் பயன்படுத்தி, பால் உற்பத்தியாளர்களை அணுகும், தனியார் பால் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலைக்கு பாலைக் கேட்கின்றனர். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் ஆதங்கத்தோடு.

ஆவின் பால்
ஆவின் பால்
`திடீர் நோய்த் தாக்குதல்.. 200 ஏக்கர் சோகம்!' -சின்ன வெங்காயத்தால் கலங்கும் தேனி விவசாயிகள்

இது தொடர்பாக விளக்கம் பெற தேனி ஆவின் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தேனி ஆவினுக்குச் சொந்தமான, சிட்கோ வளாகத்தில் உள்ள பால் குளிரூட்டும் மையத்தில் 1,20,000 லிட்டர் பாலைக் குளிரூட்ட முடியும். தற்போது அதிகளவு பால் வருவதால், குளிரூட்டும் வசதி போதியதாக இல்லை. அதனால்தான், பாலைக் கீழே கொட்டும் நிலை உருவானது. அதற்காக, பால் உற்பத்தியாளர்கள் மீது எந்தச் சுமையையும் நாங்கள் வைக்கவில்லை. அதற்கு உரிய பணம் கொடுக்கப்பட்டது.

இப்படிக் கூடுதலாக வரும் பாலைக் குளிரூட்ட, தற்போது உள்ள குளிரூட்டு மையம் அருகே புதிதாக 30,000 லிட்டர் பாலைக் குளிரூட்டும் வசதி கொண்ட மையம் அமைக்கும் பணிகள் நடந்து கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளன. அடுத்த வாரத்தில் அது திறக்கப்படும். பின்னர், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. இது ஒருபுறம் என்றால், தேனியிலிருந்து மதுரைக்கு, பால் தினமும் டேங்கர் லாரி மூலம் அனுப்பப்படுகிறது. மதுரை செல்லும் டேங்கர், மீண்டும் தேனி வர தாமதமாகிறது. தற்போது அதையும் சரி செய்துவிட்டோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு