Published:Updated:

`விமர்சனம் செய்யவோ.. விவாதிக்கவோ நேரம் இல்லை!' -தன்னார்வலர்கள் விவகாரம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

`ரேபிட் கிட் வராததால் எந்தப் பணிகளும் தாமதமாகவில்லை. அக்கருவிகள் வருதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அக்கருவிகள் வந்தால் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்படும்'

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இரண்டாவது நாளாக மதுரையில் நடந்த கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் சிறு வியாபாரிகள், வணிகர் சங்கம், தொழில் வர்த்தக சங்கம், மடீசியா நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
ஈ.ஜெ.நந்தகுமார்

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``மக்களைக் காப்பாற்றும் மகத்தான பணியில் முதல்வர் இரவும் பகலும் உழைத்துக்கொண்டுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க சுய தனிமையும், சுய கட்டுப்பாடும் முக்கியம். உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை உள்ளதை நாம் பார்க்கிறோம்.

அரசு செய்வது எல்லாம் மக்களின் நன்மைக்குத்தான். மக்களின் உயிரைக் காப்பதுதான் அரசுக்கு முதல் பணி. அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா ஆலோசனைக் கூட்டம்
கொரோனா ஆலோசனைக் கூட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடை அல்ல. அரசு அதை முறைப்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து தன்னார்வலர்கள் செயல்படக் கூறியுள்ளோம். தன்னார்வலர்களுக்கு வேண்டிய உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும்.

ரேபிட் கிட் வராததால் எந்தப் பணிகளும் தாமதமாகவில்லை. அக்கருவிகள் வருதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அக்கருவிகள் வந்தால் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தப்படும்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
ஈ.ஜெ.நந்தகுமார்

மக்களால் கைவிடப்பட்டவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விடும் அறிக்கைகளை மக்கள் விரும்ப மாட்டார்கள். தற்போது விமர்சனம் செய்யவோ, விவாதிக்கவோ நேரம் இல்லை. முதலமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். அவர்கள்தான் எஜமானர்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு