Published:Updated:

`ஆரோக்கிய சேது ஆப் உருவாக்கியது யார் என்று தெரியாது' - அதிர்ச்சி தரும் மத்திய மின்னணு அமைச்சகம்!

ஆரோக்கிய சேது செயலி
News
ஆரோக்கிய சேது செயலி

கொரோனா பரவலைக் கண்காணிக்க மத்திய அரசு உருவாக்கிய செயலி `ஆரோக்கிய சேது.’ இந்தச் செயலியைப் பல லட்சம் இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர்.

ஆரோக்கிய சேது செயலி குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள செளரவ் தாஸ் என்ற செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பினார். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலே கிடைக்காமலிருந்து வந்தது. முதலில் தேசிய தகவல் மையம் `இந்தச் செயலி குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை' எனக் கூறியது. பின்னர் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விஷயத்தைத் தேசிய மின் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றிவிட்டது. தேசிய மின் நிர்வாகப் பிரிவு, `இந்தத் தகவல்கள் எங்களுக்குச் சம்பந்தமில்லாதவை' என்று பதிலளித்திருக்கிறது.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆரோக்கிய சேது செயலிக்கான இணையதளத்தில், `தேசிய தகவல் மையம் உருவாக்கிய செயலி இது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தேசிய தகவல் மையம் மற்றும் மத்திய மின்னணு அமைச்சகம் (National Informatics Centre and Information Technology Ministry) என யாரிடமும் இந்தச் செயலி குறித்த தகவல்கள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து ஆரோக்கிய சேது இணையதளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துபூர்வமாக விளக்குமாறு தேசிய தகவல் மையத்திடம் கேட்டுக்கொண்டது மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission). தற்போது இந்தக் கேள்விக்கு `ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை' என பதிலளித்திருக்கிறது மத்திய மின்னணு அமைச்சகம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இதைத் தொடர்ந்து, ``தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிறப்பு தகவல் அதிகாரிகள், தேசிய தகவல் மையம், மத்திய மின்னணு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?'' எனக் கேள்வியெழுப்பி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய தகவல் ஆணையம்.

மேலும், `ஆரோக்கிய சேது இணையதளம் குறித்து எந்தத் தகவலும் இல்லாதது எப்படி?' என விளக்கமளிக்குமாறு தேசிய தகவல் மையத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டதோடு அடுத்த மாதம் சிறப்பு தகவல் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.