Published:Updated:

``இந்து என்ற வார்த்தை மிக மோசமானது; நான் கூறியதில் தவறில்லை!" - காங்கிரஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

காங்கிரஸ் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி ( ட்விட்டர் )

‘இந்து’ என்ற வார்த்தை பாரசீக மொழி என்றும், அது மிகவும் மோசமான அர்த்தம்கொண்டது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர், தான் கூறியது தவறில்லை என உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம், பெலகாவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி, " 'இந்து' என்ற வார்த்தை பாரசீக மொழி. அது மிகவும் மோசமான அர்த்தம்கொண்டது. மேலும், கர்நாடகாவிலுள்ள மக்கள்மீது ஒரு வார்த்தையும், ஒரு மதமும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு எதிராகச் சிலர் கருத்து தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நான் சொன்னதில் தவறில்லை, பாரசீக வார்த்தை (இந்து) எப்படி வந்தது என்பது பற்றி நூற்றுக்கணக்கான பதிவுகள் இருக்கின்றன. சுவாமி தயானந்த சரஸ்வதியின் 'சத்யார்த்த பிரகாஷ' புத்தகத்திலும், டாக்டர் ஜி.எஸ்.பாட்டீலின் 'பசவ பாரத' புத்தகத்திலும், பாலகங்காதர திலக்கின் 'கேசரி' நாளிதழிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை மூன்று நான்கு எடுத்துக்காட்டுகள், தேவையெனில் விக்கிபீடியாவில் இது போன்ற பல கட்டுரைகள் கிடைக்கின்றன. தயவுசெய்து அதைப் படிக்கவும்" எனக் கூறினார்.