Published:Updated:

`அரசியலைத் தெரிந்துகொள்ளும் வயது அவளுக்கு இல்லை!'- மகள் சனா பதிவு குறித்து கங்குலி

வைரலான பதிவுகளில் ஒன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பிசிசிஐ தலைவருகான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்க்கும்விதமாக இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவுதான்.

குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என அனைத்தும் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமைச் சட்ட மசோதா குறித்து பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவற்றில் சிலரின் கருத்துகள் வைரலானது.

அப்படி வைரலான பதிவுகளில் ஒன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்க்கும்விதமாக இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவுதான்.

சனா கங்குலி
சனா கங்குலி
சனா கங்குலி பெயரில் வெளியான பதிவு
சனா கங்குலி பெயரில் வெளியான பதிவு

சனா கங்குலி இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாக அந்தப் பதிவை வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. 2003-ம் ஆண்டு வெளியான 'தி எண்ட் ஆஃப் இந்தியா' (The end of India) குஷ்வந்த் சிங்கால் எழுதப்பட்ட புத்தகம். இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில வரிகளான, ``இன்று, நான் முஸ்லிம் அல்ல; கிறிஸ்தவன் அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். இவர்கள் ஏற்கெனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட இளைஞர்களையும் குறிவைத்து வருகிறார்கள். நாளை இது உங்களின் மீதும் பாயும்.

உங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படித்தான் இருக்க வேண்டும். இறைச்சி சாப்பிடக்கூடாது, மது அருந்துவது கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது, வருடாந்திர யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது, அவர்கள் கூறும் பற்பசையைத்தான் பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் கை குலுக்குதல் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முத்தம் கொடுப்பது இதற்கு பதிலாக நீங்கள் `ஜெய் ஸ்ரீராம்' என்று தான் முழங்க நேரிடும். ஒருவரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள நீங்கள் இதை உணர வேண்டும்" என்று சனா குறிப்பிட்டிருந்ததாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்று வெளியானது.

கங்குலி - சனா
கங்குலி - சனா

ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான ஷாரூக் கான், வீரேந்திர சேவாக் உட்பட பல முக்கிய பிரபலங்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகக் குரல் கொடுக்காத நிலையில், 18 வயதே ஆகும் சனா கங்குலியின் எதிர்ப்பு முக்கியமான ஒன்றாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சனா பெயரில் வெளியான இந்தப் பதிவு போலியானது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``தயவுசெய்து இந்த எல்லா பிரச்னைகளிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும்.. இந்தப் பதிவு உண்மையல்ல.. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும் வயதை விட சிறிய வயதில் சனா இருக்கிறார்" என கங்குலி கூறியுள்ளார்.

`மூன்றே விநாடிகள்!' - பதவியேற்ற ஒரேவாரத்தில் கோலியை சம்மதிக்க வைத்த கங்குலி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு