Published:Updated:

கஃபே காஃபி டே சித்தார்த்தா மரணம்... கர்நாடக அரசியலில் அரங்கேறும் மோதல்கள்!

சித்தார்த்தா
News
சித்தார்த்தா

சித்தார்த்தாவின் இறுதி வாக்குமூலமாகக் கருதப்படும் அவரது கடிதமும் அதன் உண்மைத் தன்மை குறித்தும் ஆராய தனிக்குழு ஒன்றும் அந்த நிறுவனத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவின் நேத்ராவதி ஆற்றின் கரையோரம் கண்டெடுக்கப்பட்ட கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் இறுதிச் சடங்குகள் அந்த மாநிலம் பேலூரில் உள்ள அவரது தந்தையின் காபி எஸ்டேட்டில் இன்று மாலை நடைபெற்றன.

சித்தார்த்தா
சித்தார்த்தா

சித்தார்த்தாவின் மரணத்தை அடுத்து அந்த நிறுவனத்தின் தற்காலிகத் தலைவராக நிதின் பாக்மானே நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் சித்தார்த்தாவின் இறுதி வாக்குமூலமாகக் கருதப்படும் அவரது கடிதமும் அதன் உண்மைத் தன்மை குறித்தும் ஆராய தனிக்குழு ஒன்றும் அந்த நிறுவனத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது. ’நிறுவனத்தின் ஆடிட்டர்களுக்கும், நிர்வாக மேலாண்மைக்கும் தெரியாமல் நான் சில பண வர்த்தகத்தில் ஈடுபட்டேன்’ என்று அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததெல்லாம் உண்மையா என்று இந்தக் குழு ஆய்வு செய்யும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது ஒருபக்கம் இருக்க, கர்நாடக மாநிலத்தில் புதிய கட்சி பதவியேற்று இரண்டு நாள்களே ஆகியிருக்கும் நிலையில் அந்த மாநிலத்தின் அரசியல் மட்டத்தில் சித்தார்த்தாவின் மரணம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்தார்த்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் எடியூரப்பா
சித்தார்த்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் எடியூரப்பா
டிவி9 தொலைக்காட்சி

’வருமானவரித்துறையின் கொடுங்கோன்மை தேசத்தின் தொழில்முனைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது’ என்று கர்நாடக காங்கிரஸ் கருத்து கூறியுள்ளது. இதை வன்மையாகக் கண்டித்துள்ள அந்த மாநில பாரதிய ஜனதா ‘ஒரு மனிதரின் மரணத்தில் ஆதாயம் தேடாதீர்கள்’ என்று விமர்சித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

”மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் தனது பங்குகளை விற்றதன் மூலம் 3200 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய சித்தார்த்தா 300 கோடி ரூபாய் வரிப்பணம் செலுத்தவேண்டிய நிலையில் வெறும் 46 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தி மக்களை ஏமாற்றி இருக்கிறார். அவரது மரணம் துயரமானதுதான். ஆனால் அவரைப் புனிதப்படுத்த வேண்டாம்” என்று மக்களில் ஒருதரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சிவக்குமார்
சிவக்குமார்

இரண்டு வருடங்களுக்கு முன்பு சித்தார்த்தாவின் கஃபே காஃபி டே கிளைகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதும் அதற்கு அடுத்த இரண்டு நாள்களிலேயே கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் அவரது நெருங்கிய நண்பருமான டி.கே.சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ’A lot can happen over a cup of coffee’ என்பதுதான் கஃபே காஃபிடேயின் டேக்லைன். தற்போது சித்தார்த்தாவின் மரணத்தை அடுத்து ’A lot is happening over a man's suicide’ என்பதாக கர்நாடக அரசியல் மோதல்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.