Published:Updated:

புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் கொடுக்கப்பட்டதா? சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க்
புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க்

புதுச்சேரி பெண் ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் விநியோகம் செய்ததாக ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், அது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுச்சேரி ஆட்சியராக இருந்த அருண் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமுறையில் சென்றதால், அவருக்கு பதிலாக பூர்வா கார்க் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நச்சுத் தன்மை உடைய குடிநீர் விநியோகிக்கப்பட்டிருப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வாட்ஸ்அப் மூலம் தகவல் அளித்திருக்கிறார்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்
Represntational Image

அத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேரிடர் மற்றும் வருவாய்த்துறையின் சிறப்பு அதிகாரி சுரேஷ்ராஜ், தன்வந்திரி காவல் நிலையத்தின் நிலைய அதிகாரிக்கு அனுப்பியிருக்கும் புகார் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் நேற்று முன்தினம் புதுச்சேரி- வழுதாவூர் சாலையில் பேட்டையன்சத்திரத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசியலைக் கலக்கும் காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகைப்படம்! - பின்னணி என்ன?

அப்போது ஆட்சியர் அலுவலக ஊழியர்களில் ஒருவர், ஆட்சியருக்கு ஸ்விஸ் ஃப்ரெஷ் (Swiss Fresh) என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்திருக்கிறார். அப்போது ஆட்சியர் அதைக் குடிக்கத் திறந்தபோது, அதில் நிறமற்ற நச்சுத்தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்திருக்கும் இந்தச் செயல், ஆட்சியருக்கு தனிப்பட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக வாட்ஸ்அப்பில் தெரிவித்திருந்தார் ஆளுநர் கிரண் பேடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பிரிவின் விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது,``மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களில் கைகளில் தடவும் சானிடைஸரை 5 மற்றும் 10 லிட்டர் கேன்களில் மொத்தமாக வாங்கி சிறிய பாட்டில்களில் ஊற்றிப் பயன்படுத்துவது வழக்கம். அப்படித்தான் ஆட்சியர் அலுவலகத்திலும் காலியான தண்ணீர் பாட்டிலில் சானிடைஸரை ஊற்றிவைத்திருக்கின்றனர்.

புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’

நேற்று முன்தினம் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தின்போது ஆட்சியர் தண்ணீர் கேட்கவும், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, தவறுதலாக சானிடைஸர் இருந்த பாட்டிலைக் கொடுத்திருக்கின்றனர் ஊழியர்கள். குடிப்பதற்காக ஆட்சியர் அந்த பாட்டிலைத் திறந்தபோது சானிடைஸர் வாசம் வந்ததால் அதைக் குடிக்காமல் அப்படியே வைத்துவிட்டார். தண்ணீர் பாட்டிலில் சானிடைஸர் ஊற்றிய ஊழியர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியும்” என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 284-ன் கீழ் (மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கவனக்குறைவாகக் கையாளுதல்) வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

வழக்கின் தன்மை குறித்தும், விசாரணை குறித்தும் விளக்கம் கேட்க சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் எஸ்.பி ராஜசேகர் வல்லட்டை தொடர்புகொண்டோம். ``இந்திய தண்டனைச் சட்டம் 284-ன் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். விசாரணையின் முடிவில்தான் முழுத் தகவலும் தெரியவரும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு