Published:Updated:

நுபுர் ஷர்மா விவகாரம்: ``குர்ஆனைப் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்!" - இந்து அமைப்பினர்மீது வழக்கு பதிவு

போராட்டத்தின்போது கேசவ் மூர்த்தி ( ட்விட்டர் )

ராஜஸ்தான் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் இந்து அமைப்பினர் பேசியது தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

நுபுர் ஷர்மா விவகாரம்: ``குர்ஆனைப் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்!" - இந்து அமைப்பினர்மீது வழக்கு பதிவு

ராஜஸ்தான் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் இந்து அமைப்பினர் பேசியது தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

Published:Updated:
போராட்டத்தின்போது கேசவ் மூர்த்தி ( ட்விட்டர் )

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவைக் கைது செய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக அவரை இரண்டு பேர் தலைதுண்டித்துக் கொலைசெய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தும், ராஜஸ்தான் டெய்லர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க-வினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நுபுர் ஷர்மா விவகாரம்
நுபுர் ஷர்மா விவகாரம்

அந்த வகையில் கடந்த 1-ம் தேதி கர்நாடகாவில் இந்து ஜாகரன் வேதிகே அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் கன்வீனர் கேசவ் மூர்த்தி, ``மனிதர்களைக் கொல்லுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் குர்ஆனைப் படிப்பவர்கள் இதைப் பின்பற்றுவார்கள், அப்படித்தானே? எனவே, குர்ஆனைப் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்" எனப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, அஞ்சுமன்-இ-இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜமீர் அகமது குர்ஆன் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் அவதூறாகச் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய இந்து ஜாகரன் வேதிகே அமைப்பின் மாநிலத் தலைவர் கன்வீனர் கேசவ் மூர்த்தி மற்றும் சிலர்மீது கர்நாடக மாநிலத்தின் கோலார் நகர்ப் பகுதி காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இதனடிப்படையில், கேசவ் மூர்த்திக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153-A (குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 153-B (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்), 295-A (மத உணர்வுகளைச் சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!