Published:Updated:

``ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான்... எதுக்கும் பயப்பட மாட்டேன்!'' - ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இணையதளத்தில் வைரலானது. ஏராளமானோர் தனக்கு போன் செய்து, ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக அவர் கொந்தளிப்போடு தெரிவித்துள்ளார்.

``ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான்... எதுக்கும் பயப்பட மாட்டேன்!'' - ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இணையதளத்தில் வைரலானது. ஏராளமானோர் தனக்கு போன் செய்து, ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக அவர் கொந்தளிப்போடு தெரிவித்துள்ளார்.

Published:Updated:
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

வழக்கமாக அமைதியான மனிதராகப் பார்க்கப்படும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, `பிச்சை, விபசார விடுதி, நாய்’ எனப் பல வார்த்தைகளைப் பதற்றத்தில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்பகத்தில் நடந்த கலைஞர் வாசகர் வட்டக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

அப்போது பா.ஜ.க-வின் ஹெச்.ராஜாவையும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருந்தார்.

அன்பகம் , அறிவாலயம்
அன்பகம் , அறிவாலயம்

தொடர்ந்து பேசியவர், "இந்தியாவிலேயே தமிழகம் தலை சிறந்த மாநிலமாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவங்களுக்கு அறிவே கிடையாது, ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில் இதுவரை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனது கிடையாது. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு 7, 8 பேர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர். இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வயிற்றெரிச்சலோடு சொல்கிறேன். சுப்ரீம் கோர்ட் ஆர்.எஸ்.எஸ் கூடாரமாகிவிட்டது. நான் ஒரு வக்கீல். அதனால் இதை நான் சொல்கிறேன். மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறான். நாமெல்லாம், இந்துக்களுக்கு எதிரிபோல சித்திரிக்கின்றனர். தி.மு.க-காரன் கோயிலுக்குப் போகவில்லையென்றால் ஐயருக்கே வருமானம் கிடையாது. ஐயர் கோயிலுக்குப் போனா 5 ரூபா போடுவான். தி.மு.க வட்டச் செயலாளர் போனா 100 ரூபா போடுவான். பெருமைக்காவது போடுவான். கவுன்சிலர் போனா 500, எம்.எல்.ஏ போனா 1,000 போடுவான். நேரு போனா 5,000 போடுவாரு. நாம போடுற துட்டுலதான் வாழ்ந்துகிட்டு இருக்கான் அவன்.

கோயில் கட்டுறது நாம. ஆனால், உள்ளே போக முடியுதா? நம்ம நாட்டு ஜனாதியையே வெளியே நிக்க வைக்கிறவங்க.
ஆர்.எஸ்.பாரதி

இதனால்தான் இந்து மதமே பரவிக்கொண்டிருக்கிறது. நாம இந்துக்கள்தான் என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். கோயில் கட்டுறதே நாமதான். ஆனால், உள்ளே போக முடியவில்லை. இந்த நாட்டோட ஜனாதிபதியையே விடவில்லை. பத்திரிகைகாரர்களுக்கு வேற வேலை இல்லை. கெஜ்ரிவால், நரேந்திர மோடி போன்றவர்கள் பிரசாந்த் கிஷோரைப் பயன்படுத்திக்கிட்டாங்க. அதைப் பற்றி செய்தி போடல. டி.வி காரங்க மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே கிடையாது. பம்பாய்ல உள்ள ரெட்லைட் ஏரியா மாதிரி கம்பெனி நடத்துறானுக. தளபதி கோயிலுக்குப் போனாரா... அவரோட வீட்டுல உள்ளவங்க கோயிலுக்குப் போனாங்களானு பார்த்துகிட்டு இருக்கானுங்க. இதுவா நாட்டுக்கு முக்கியம்?’’ என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்.எஸ்.பாரதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சு பத்திரிகையாளர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. அவர் மீது தி.மு.க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஆர்ப்பாட்டம் நடந்துவோம் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன.

ஆர்.எஸ் .பாரதி மற்றும் ஸ்டாலின்
ஆர்.எஸ் .பாரதி மற்றும் ஸ்டாலின்

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "1967-ம் ஆண்டு ராஜாஜி என்ற பிராமாணர் உதவியுடன்தான் ஈ.வே.ரா-வை எதிர்த்து கூட்டணி அமைத்து தி.மு.க-வால் வெற்றி பெற முடிந்தது. 1971-ம் ஆண்டு இந்திராகாந்தி என்ற பிராமணருடன் கூட்டணி அமைத்ததாலே ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை தி.மு.க மறந்துவிட்டதா... 1996-ம் ஆண்டு சோ என்ற பிராமணர் அமைத்துத்தந்த கூட்டணியால்தான் மூப்பனார் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்பதை தி.மு.க-வால் மறுக்க முடியுமா? 1999-ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பிராமணர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க இடம் பிடித்ததையும் மறந்து விட வேண்டாம்'' என்று கூறியுள்ளார். தமிழ்நாடு பிராமணர் சங்கமும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதியிடம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், "நீங்கள் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளதாமே... முதல்ல அதைப் பற்றி மீடியாவுக்கு விளக்கம் சொல்லிட்டு வாங்க'' என்று கூறியுள்ளார். உடனடியாக, மீடியாக்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். "என்னோட தலைவர் எனக்கு இந்த உத்தரவை போட்டதால், நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

ஜெயலலிதாவையே ஜெயிலுக்குள்ள தள்ளியவன் நான். டான்ஸி கேஸ் முதன்முதலா போட்டது நான்தான். இவங்க பண்றதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
ஆர்.எஸ். பாரதி

இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதியைச் சந்தித்து, "எப்பவும் நிதானமா பேசுகிற நீங்க எப்படி இவ்வளவு மோசமா பேசியிருக்கீங்க..!’’ என்று கேட்டவுடன் மளமளவென கொட்டினார்...

''அன்னைக்கு நான் கொஞ்சம் எமஷோனலாத்தான் இருந்தேன். பெரியாரைப் பார்த்து ராமசாமி நாயக்கர் என்று ஹெச்.ராஜா பேசுகிறார். என்னோட தலைவரைப் பார்த்து 'திருடன்' என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டா கொந்தளிப்பு வரத்தானே செய்யும். எல்லா மீடியாவையும் அப்படினு சொல்லல. அதுக்காக வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். என்னோட பேச்சு வைரலானதைத் தொடர்ந்து, ஏராளமானோர் போன் செய்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர். அப்படிப் பேசுவது யார் என்று எனக்குத் தெரியும். டான்ஸி கேஸ் போட்டு ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான். இவங்க பண்றதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்!'' என்றார்.

ஆர்.எஸ்.பாரதி ஆயிரம் விளக்கம் சொன்னாலும் இப்போதைக்கு இந்த விவகாரம் முடியாதுபோல்தான் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism