Published:Updated:

``இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக் கொடி இருக்கும்" - கர்நாடக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

`அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள், இப்போது அதை நாங்கள் கட்டவில்லையா?' - அமைச்சர் ஈஸ்வரப்பா

``இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக் கொடி இருக்கும்" - கர்நாடக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

`அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள், இப்போது அதை நாங்கள் கட்டவில்லையா?' - அமைச்சர் ஈஸ்வரப்பா

Published:Updated:
கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

கர்நாடகா கல்லூரி ஒன்றில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்லூரி வளாகத்திலிருந்த தேசியக்கொடியை அகற்றிவிட்டு மாணவர்கள் சிலர் கம்பத்தில் காவிக் கொடியைப் பறக்கவிட்டனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அனைவரும், `ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. மாணவர்களின் இந்த செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி செங்கோட்டையில்
டெல்லி செங்கோட்டையில்

இந்த நிலையில், கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவிடம் செய்தியாளர்கள் சந்திப்பில், செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்ற முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ``அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள், இப்போது அதை நாங்கள் கட்டவில்லையா?

நடக்காது என்று சொல்லப்பட்ட ராமர் கோவில் அயோத்தியில் எழுப்பப்பட்டது போல என்றாவது ஒருநாள் இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக்கொடி இருக்கும். தேசியக் கொடிக் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு உள்ளது. மூவர்ணக்கொடி தற்போது தேசியக் கொடியாக உள்ளது. இதனால் அதை அனைவரும் மதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் வரும் எனக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.