Published:Updated:

``ராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்!'' - தங்கபாலு

ராஜீவ் காந்தி

" 'ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்' என்று சீமான் பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால், அவரும் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனவே, அவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்" என்கிறார், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கே.வி.தங்கபாலு.

``ராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்!'' - தங்கபாலு

" 'ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்' என்று சீமான் பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால், அவரும் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனவே, அவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்" என்கிறார், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கே.வி.தங்கபாலு.

Published:Updated:
ராஜீவ் காந்தி

''ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்'' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பரபரப்பு சூடுபறக்க ஆரம்பித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டுவந்த சீமான், தனது பேச்சின்போது, "அமைதிப்படை எனும் அநியாயப் படையை இலங்கைக்கு அனுப்பி, எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தோம்" என உணர்ச்சிகரமாகப் பேசினார்.

கே.வி.தங்கபாலு
கே.வி.தங்கபாலு

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கே.வி.தங்கபாலு, "சீமானை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதையடுத்து, விக்கிரவாண்டி காவல் நிலையத்தில், சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், இதுகுறித்து ஊடகத்தில் கருத்து தெரிவித்த சீமான், "நான் கடந்த 25 வருடங்களாக இதைத்தான் பேசிவருகிறேன். இதற்காகப் பலமுறை சிறை சென்றும் திரும்பியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியினர்தான் இப்போது வேறு வேலையில்லாமல், இதை எடுத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, வழக்கை சட்டப்படி சந்திப்பேன். மற்றபடி, நான் பேசிய பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, சீமானின் பேச்சுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.வி.தங்கபாலுவின் கருத்தைக் கேட்டோம்...

சீமான்
சீமான்

''சீமானின் பேச்சு, சமுதாயத்தில் மேலும் வன்முறையைத் தூண்டுகிற விதமாகவும் தேச விரோதச் செயல்கள் செய்வோரை ஆதரிக்கும் விதமாகவும் இருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சிலரும் தண்டனை பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலைச் சதியில் சம்பந்தப்பட்ட ஒருவர், இதுநாள் வரையிலும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்திருக்கிறார் என்பது சீமானின் பேச்சிலிருந்து தெரியவருகிறது. அதாவது, 'ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்' என்று அவரே தன் சாட்சியாக ஒப்புக்கொள்கிறார் என்கிறபோது, இந்தக் குற்றத்தில் அவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது, நீதிமன்றம், காவல்துறையை ஏமாற்றி, அவர் இதுநாள் வரையில் நடமாடிக்கொண்டிருக்கிறார். எனவே, இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள நீதியின் அடிப்படையில், சீமான் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப்பெற்றதோ, அதேவிதமான தண்டனைகள் சீமானுக்கும் கிடைக்க வேண்டும். சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது காவல் துறையின் கடமை. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி, இந்நாட்டுக்கு மட்டுமல்ல... உலகத்துக்கே மகத்தானதொரு தலைவர். அப்படிப்பட்ட தேசப்பிதாவைப் பற்றி யாரேனும் தவறாகப் பேசினாலோ அல்லது அவமதித்தாலோ அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், காந்தி பற்றி காங்கிரஸ் கட்சியினர் கண்டுகொள்வதே இல்லை என்று சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவரது உலகமே வேறாக இருப்பதால், காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இதே வரிசையில், ராஜீவ் காந்தி கொலையை வரவேற்கிறவர்களையும் நியாயப்படுத்துபவர்களையும் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

சீமான் இப்போதுதான் அரசியலுக்குள் வந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்பது நீண்ட நெடிய தியாக வரலாறு. அதுவும் தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி செய்திருக்கும் தியாகம் என்பது சீமானுக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

பிரசாரத்தில் சீமான்
பிரசாரத்தில் சீமான்

விடுதலைப்புலிகளின் கொடுமைகளிலிருந்து தமிழர்களை மீட்டெடுக்கத்தான் இந்திய அமைதிப் படையே இலங்கை சென்றது. இலங்கையில் இன்றைக்கும் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்றால், அதற்கு ராஜீவ் காந்தியும் இந்திரா காந்தியும் எடுத்துவந்த மகத்தான செயல்பாடுகள்தான் காரணம்!" என்றார் தங்கபாலு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism