Published:Updated:

`கண்டவுடன் சுடும் முடிவுக்கு தள்ளிவிடாதீர்கள்!' -ஊரடங்கு குறித்து சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ் ( Twitter/@trspartyonline )

`கொரோனா காரணமாக விதித்த கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவதில்லை. ராணுவத்தைக் களமிறக்குவோம்.'

இந்தியாவில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், மக்கள் கேட்டபாடில்லை. வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு போடப்பட்டாலும், மக்கள் வெளியே சுதந்திரமாகவே சுற்றி வருகின்றனர். போலீஸாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

இதனால், மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், ''ஊரடங்கை மீறி வெளியே நடமாடினால் மக்களைச் சுட்டுத்தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று தெலங்கானா அரசு எச்சரித்துள்ளது.

தெலங்கானாவில் இரு நாள்களுக்கு முன்னதாக144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமையில் மக்கள் அதிகளவில் வெளியே நடமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து , தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், ''சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல், மக்கள் தொடர்ந்து வெளியே நடமாடுகின்றனர்.

`சிறந்த சிகிச்சையையும் மீறி இறப்பு!' -கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபருக்கு வேறு என்ன பாதிப்பு?!

வீடுகளுக்குள் இருப்பதில்லை. இதனால், கண்டவுடன் சுட்டுத்தள்ளும் முடிவுக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள். ராணுவத்தையும் களமிறக்க வைத்துவிடாதீகள். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையும் கட்டாயம் ஊரடங்கு உள்ளது. இரவு 6 மணிக்கு அனைத்துக் கடைகளும் கண்டிப்பாக அடைக்கப்பட்டு விட வேண்டும். அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் உங்களுக்கு உதவ தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

தெலங்கானா மாநிலத்தில் 36 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 19,330 பேர் வெளிநாடுகளில் இருந்து தெலங்கானா திரும்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு