Published:Updated:

`சொந்த மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பாஸ்!' - தாசில்தார் செயலால் கலங்கும் சீர்காழி

கொடியம்பாளையம்
கொடியம்பாளையம்

இந்தக் கிராமத்தின் மூன்று திசைகளும் கடலாலும் ஒரு திசை கொள்ளிடம் நதியாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

நாகை மாவட்டம், கொடியம்பாளையம் கிராம மக்கள் தங்களது சொந்த மாவட்டத்துக்குள் பயணிக்கவே இ-பாஸ் பெற வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

கொடியம்பாளையம்
கொடியம்பாளையம்

சீர்காழி அருகே கொடியம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் மூன்று திசைகளும் கடலாலும் ஒரு திசை கொள்ளிடம் நதியாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. நாகை மாவட்டத்திலிருந்து கொடியம்பாளையம் கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனறால் பழையாறு என்ற இடத்திலிருந்து படகு மூலம் செல்ல முடியும்.

இல்லையெனில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக நீண்ட பாலத்தில் பயணித்துச் செல்ல முடியும். இந்தப் பாலம் மணிசங்கர் அய்யர் இத்தொகுதி எம்.பி-யாக இருந்தபோது அவருடைய தீவிர முயற்சியால் கட்டப்பட்டதாகும்.

`வெரைட்டி ரைஸ், வீட்டிலேயே சமையல்!’ - 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த மண்டலத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 4-வது மண்டலமான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து மூலம் பயணிகள் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

தாசில்தார் சாந்தி
தாசில்தார் சாந்தி

ஆனால், கொடியம்பாளையம் கிராம மக்கள் தங்கள் ஊரிலிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாகத்தான் செல்ல முடியும். இதனால் இக்கிராம மக்கள் தங்களது சொந்த மாவட்டமான நாகையில் பயணிக்கவே கடலூர் மாவட்டத்தில் இ-பாஸ் வாங்க வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி சீர்காழி தாசில்தார் சாந்தியைத் தொடர்புகொண்டு, "சொந்த மாவட்டத்தில் பயணிக்க இ-பாஸ் வாங்க வேண்டுமா. அவர்களுக்கு அரசு விதிவிலக்கு அளிக்க ஏற்பாடு செய்வீர்களா?" என்று கேட்டோம்.

"ஏன் வெளியில் போறாங்க. போகணும்னா இ-பாஸ் வாங்கிக்க சொல்லுங்க" என்று பதில் சொல்லி போன் தொடர்பைத் துண்டித்தார்.

அடுத்த கட்டுரைக்கு