Published:Updated:

``தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிப்பதா?" - ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பேச்சுக்குக் கனிமொழி கண்டனம்!

ரிசர்வ் வங்கி சர்ச்சை

ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

``தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிப்பதா?" - ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பேச்சுக்குக் கனிமொழி கண்டனம்!

ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
ரிசர்வ் வங்கி சர்ச்சை

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணைப்படி, தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். அது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டும். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கவேண்டியது இல்லை. அவர்கள் தவிர்த்து அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அந்தவகையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணையை அரசு அதிகாரிகளே பின்பற்றாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகச் செய்தியாளர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நாங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்... தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நிற்கவேண்டியது கட்டாயமில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" எனத் தமிழ் தெரிந்த அலுவலர்களே வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஓர் அரசாணையைக்கூட படித்துத் தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்... இல்லை இவர்கள் தமிழக அரசைவிட மேம்பட்டவர்களா?" என பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர, யாராக இருந்தாலும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்' என்ற அரசாணையையும் கனிமொழி இணைத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.