Published:Updated:

நபிகள் நாயகத்துக்கு எதிராகச் சர்ச்சை வீடியோ - தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ கைது!

ராஜா சிங்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கைதுசெய்யப்பட்டார்.

நபிகள் நாயகத்துக்கு எதிராகச் சர்ச்சை வீடியோ - தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ கைது!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
ராஜா சிங்

இஸ்லாமியர்களின் இறைத் தூதராகக் கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துகள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தின. நுபுர் சர்மாவைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மா தனது உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார். அவருக்கு அரசு பாதுகாப்பு கொடுத்துவருகிறது. ஏற்கெனவே நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தெலங்கானாவிலும் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் காமெடி ஷோ நடத்திய முனாவர் ஃபரூக்கிக்கு (Munawar Faruqui) எதிராக பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் காமெடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நபிகள் நாயகத்துக்கு எதிராகச் சர்ச்சை வீடியோ - தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ கைது!

முனாவர் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக ராஜா சிங் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு காமெடியனுக்கு எதிராகவும், அவரின் தாயாருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருப்பதோடு, நபிகள் நாயகத்துக்கு எதிராகவும் அந்த வீடியோவில் ராஜா சிங் கருத்து தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானவுடன் இஸ்லாமியர்கள் நேற்று இரவு ஹைதராபாத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ ராஜா சிங்கைக் கைதுசெய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்த போலீஸார் இன்று பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கையும் கைதுசெய்தனர். ராஜா சிங் இதற்கு முன்பு காமெடியன் முனாவர் நிகழ்ச்சியை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்டிருந்தார். அதோடு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை தீவைத்து எரிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.