Published:Updated:

`மறைத்துவிட்டார்; வழக்கம்போல் அலுவலகத்தில் பணி!’ - கொரோனா பாதித்த அரசு அதிகாரியால் அதிர்ச்சி

கொரானோ வைரஸ்
கொரானோ வைரஸ்

அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரானோ தொற்று உறுதியாகியுள்ளது.

டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்றதை மறைத்த அதிகாரிக்குக் கொரானோ தொற்று உறுதியாகியிருக்கிறது. அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துத் தனிமைப்படுத்தியுள்ளனர். அத்தோடு அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு அவர் ஒருவரால் 60 பேரைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகத் தெலங்கானா மாவட்ட அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

தெலங்கானா
தெலங்கானா
Twitter/@tsrtcbuses

டெல்லியில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லீக் ஜமாத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டனர். இதில் 1,700 முதல் 1,800 இந்தியர்களும் தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 250 பேர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன பெண்ணுக்கு பரிசோதனை
சீன பெண்ணுக்கு பரிசோதனை
உ.பாண்டி

இந்தநிலையில், கொரானோ வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தோர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அங்கிருந்த பலருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கூட்டம் முடிந்த பின்னர், தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரி கடந்த மாதம் 15-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அரசிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்காமல் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 18-ம் தேதி ஜன்கோன் திரும்பினார்.

கொரானோ தொற்று
கொரானோ தொற்று

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சுகாதாரத்துறை அல்லது காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கொரோனா நோய்த் தொற்றுக்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெலங்கானா அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அரசின் இந்த அறிவிப்பைப் பின்பற்றாத அந்த அதிகாரி முன்னெச்சரிக்கை இல்லாமல் பொதுவெளியில் இயல்பாக நடமாடியதுடன் அலுவலகம் சென்று வந்துள்ளார். இதனிடையே அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ``வேலை நாள்களில் ஒரு அரசு அதிகாரி எந்த வித நிகழ்ச்சிகளுக்குச் செல்வதாக இருந்தாலும் அரசின் அனுமதியுடன் விடுமுறை பெற்றபின்புதான் செல்ல வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால், அவர் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார். அத்தோடு அவர் சென்று வந்ததையும் மறைத்துவிட்டு ஜாலியாக மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கிறார். அதே போல் அலுவலகத்திலும் வந்து வேலை பார்த்திருக்கிறார்.

கொரானோ வைரஸ்
கொரானோ வைரஸ்

இந்தநிலையில், அவருக்கு தொண்டை வலி மற்றும் காய்ச்சல் அதிகமானது. அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரானோ தொற்று உறுதியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் யார் யாரோடு பழகினார் எங்கெல்லாம் சென்று வந்தார் என்று விசாரித்து 60-க்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்திச் சிறப்புச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 279 பிரிவு, உட்பிரிவு பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு