Published:Updated:

தென்காசி: அரசு மருத்துவமனையில் அட்மிஷனுக்கு லஞ்சம்! - வைரல் வீடியோ அதிர்ச்சி

மருத்துவமனை பணியாளர் கணேசன்
மருத்துவமனை பணியாளர் கணேசன்

தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பி வழிவதால் பெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் பெட் கிடைப்பதற்கும் உணவுக்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்கும் லஞ்சம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும் நோய் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனை அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனா தவிர்த்து பிற நோய்களுக்காகவும் வழக்கமான சிகிச்சைகளுக்காகவும் செல்பவர்கள் உள்நோயாளிகளாகத் தங்குவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.

மூச்சுத் திணறலால் இறப்பு ; உடலை மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை! - குழப்பத்தால் தொடரும் அவலம்

பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதால் பிற நோயாளிகளை தலைமை அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் குறைவாக இருக்கும் பெட்களில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கிறார்கள்.

`எலும்பு முறிவு; அவசர சிகிச்சை வார்டு' -மதுரை அரசு மருத்துவமனை நோயாளிக்கு நேர்ந்த அதிகாலை பயங்கரம்

தென்காசி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பெட் கிடைப்பதற்கும் சாப்பாட்டுக்கான டோக்கன் பெறுவதற்கும் மருத்துவமனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. இது தொடர்பாக மருத்துவப் பணியாளர் லஞ்சம் பெறும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

கொரோனா:`100 நாள்களுக்குப் பின் பாசிட்டிவ்; உள்ளூர் பரவல்!’ - அச்சத்தில் வியட்நாம்

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் காட்சி குறித்து தென்காசி அரசு மருத்துவமனையின் ஊழியரான கணேசன் என்பவரிடம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் விசாரணை நடத்தினார். 

லஞ்சம் பெற்ற மருத்துவப் பணியாளர்
லஞ்சம் பெற்ற மருத்துவப் பணியாளர்

விசாரணைக்குப் பின்னர் மருத்துவப் பணியாளர் கணேசன் சிவகிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு