Published:Updated:

தேனி: அரசு மருத்துவமனையில் பணியின் போது நடனமாடிய செவிலியர்கள்? வைரலான வீடியோ - முதல்வர் விசாரணை!

சர்ச்சை வீடியோ

எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மருத்துவமனையில் பணியின் போது மருத்துவப் பணியாளர்கள் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி: அரசு மருத்துவமனையில் பணியின் போது நடனமாடிய செவிலியர்கள்? வைரலான வீடியோ - முதல்வர் விசாரணை!

எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மருத்துவமனையில் பணியின் போது மருத்துவப் பணியாளர்கள் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சர்ச்சை வீடியோ

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கண்டமனூர் விலக்கு அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தேனி மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மேற்கு தொடர்ச்சி மலை, தமிழக - கேரள எல்லையில் உள்ள மலைவாழ் மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 170 மருத்துவர்கள், 400 செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது முதல் கொரோனா சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மருத்துவமனையில் பணியின் போது மருத்துவப் பணியாளர்கள் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செவிலியர் கண்காணிப்பாளர், ஆண் செவிலியர், மருத்துவப் பணியாளர் என 5 பேர் கைகளைக் கோர்த்து கொண்டு குழுவாகவும், தனித்தனியாகவும் சினிமா பாடலுக்கு ஏற்றார் போல அந்த வீடியோவில் நடனம் ஆடினர்.

சர்ச்சை வீடியோ
சர்ச்சை வீடியோ

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர்களிடம் விசாரித்தோம். ``செவிலியர் கண்காணிப்பாளர் அறையில் அவ்வப்போது இவ்வாறு நடனம் ஆடுவது வாடிக்கையாக உள்ளது. பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என்ற பெயரிலும் கேக் வெட்டி இவ்வாறு நடனம் ஆடுவார்கள். மூத்த மருத்துவப் பணியாளர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் யாரும் இதை கண்டுகொள்வது இல்லை'' என்றனர்.

இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள கிரேடு ஒன் மருத்துவ செவிலியர் ஜெனி ஜோஸ்வினுக்கு இன்று குடியரசு தினவிழாவில் சிறந்த பணியாளருக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் மிகவும் பொறுப்பாக பணியாற்ற வேண்டிய செவிலியர்கள் இப்படி குத்தாட்டம் போட்டு கொண்டிருப்பது அவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது எனவும், அந்த வீடியோவில் இடம் பெற்றவருக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ச்சை வீடியோ
சர்ச்சை வீடியோ

இதுகுறித்து தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதனிடம் விசாரித்தோம். ``அந்த வீடியோவில் உள்ள மருத்துவ பணியாளர்களை அழைத்து விசாரித்தேன். அவர்கள் அந்த வீடியோ கொரோனா பரவலுக்கு முன், செவிலியர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தனர். இருப்பினும் அதன் உண்மைத்தன்மையை அறிய விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளேன். அந்தக் குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள செவிலியருக்கு சிறந்த பணியாளருக்கான சான்றிதழ் வழங்க கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இந்த வீடியோ அதன்பிறகே வெளிவந்துள்ளது" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக வீடியோவில் நடனமாடிய ஜெனி ஜோஸ்வினிடம் கேட்டோம். ``இந்த வீடியோ மருத்துவமனை வளாகத்திற்குள் எடுக்கப்பட்டது இல்லை. யாரும் அரசுப் பணியாளர் சீருடையிலும் இல்லை. வெளியே ஒருவரின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ. எப்படி வைரல் ஆனது என்று தெரியவில்லை'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism