Published:Updated:

`5 மாதங்களாகப் பதிலில்லை!' - அரசு கேபிள்டிவி ஆபரேட்டர் உரிமத்துக்காகப் போராடும் தேனி பட்டதாரிப் பெண்

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

அரசு கேபிள் ஆபரேட்டர் உரிமம் கொடுக்க மறுப்பதாகத் தேனி கலெக்டரிடம் பட்டதாரிப் பெண் ஒருவர் முறையிட்டார்.

குறைந்த செலவில் பொதுமக்கள் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக கேபிள்களை அரசு ஏற்று நடத்திவருகிறது. அதைப் பயன்படுத்தி, சில தனியார் கேபிள் நிறுவனங்கள் அரசு கேபிள் கொடுப்பதுபோல காட்டிக்கொண்டு, மக்களிடம் தங்களது கேபிள் செட்டாப் பாக்ஸ்களைக் கொடுத்து, அதிக கட்டணம் வசூல் செய்துவருகின்றனர். இந்நிலையில், அரசு கேபிள் ஆபரேட்டர் உரிமம் கொடுக்க மறுப்பதாக கலெக்டரிடம் பட்டதாரிப் பெண் ஒருவர் முறையிட்டார்.

தேனி கலெக்டர்
தேனி கலெக்டர்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் பட்டதாரிப் பெண் தேவதர்ஷினி. எம்.பி.ஏ பட்டதாரியான இப்பெண், அரசு கேபிள் ஆபரேட்டருக்கான உரிமம் பெற விண்ணப்பித்திருக்கிறார். அனைத்து விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்த பின்னர், கடைசியாக லோக்கல் கேபிள் ஆபரேட்டருக்கான எண் கொடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டுகிறார்.

எழில் கொஞ்சும் மேகமலை படங்கள்!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேவதர்ஷினி, ``தேவதானப்பட்டியின் பெரும்பாலான பகுதிகளில் அரசு கேபிள் இணைப்பு இல்லை. குறிப்பாக, எங்கள் பகுதியில் இல்லை. இதனால், நாம் ஏன் அரசு கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெறக்கூடாது எனத் தோன்றியது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, போஸ்டல் லைசென்ஸ் பெற்றேன். தொடர்ந்து, லோக்கல் கேபிள் ஆபரேட்டர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, மூன்று மாதத்துக்கான டெபாசிட் தொகையை டிடி எடுத்து, 100 நபர்களின் கையெழுத்தோடு, சென்னை அரசு கேபிள் நிறுவன தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன்.

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகியும் எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. விசாரித்ததில், தேவதானப்பட்டி பகுதியில் தனியார் கேபிள் ஆபரேட்டர் ஒருவர் உள்ளார் என்றும், அவரிடம் 2,000-த்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன என்றும், அதிக கட்டணம் வாங்கும் அவருக்கு அதிகாரிகள் ஆதரவு கொடுப்பதால், என்னுடைய விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் தெரிந்தது. இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் மனுக் கொடுத்தேன். விசாரித்த அவர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். எங்கள் பகுதி மக்கள் அரசு கேபிள் வேண்டும். அதுவரை போராடிக்கொண்டேதான் இருப்பேன்” என்றார்.

`உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குகிறார்கள்!'- தேனி 
 ஆட்சியரிடம் கலங்கிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்

இது தொடர்பாகத் தேனி கேபிள் தாசில்தாரிடம் கேட்டபோது, ``தனியார் கேபிள் ஆபரேட்டர்கள், குறிப்பிட்ட அளவு அரசு கேபிள் இணைப்புகள் கொடுக்க வேண்டும். புகார் தாரர், அந்த தனியார் ஆபரேட்டர் அரசு கேபிள் இணைப்பை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை எனக் கூறுகிறார். இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு